Advertisement

பழங்குடி மக்களுக்கு பிரியங்கா ஆறுதல்

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலத்தில், சமீபத்தில் ஏற்பட்ட நிலத்தகராறில், பழங்குடியினத்தைச் சேர்ந்த, 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட, சோன்பத்ரா கிராமத்துக்கு, காங்., பொதுச் செயலர் பிரியங்கா, இன்று(ஆக.,13) சென்றார்.

உ.பி.,யில், வாரணாசி அருகேயுள்ள சோன்பத்ரா என்ற கிராமத்தில், சமீபத்தில், நிலத் தகராறு காரணமாக, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், பழங்குடியினத்தைச் சேர்ந்த, 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த மாதம், இந்த பகுதிக்கு வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்றார், காங்., பொதுச் செயலர் பிரியங்கா. ஆனால், முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரியங்கா போராட்டத்தில் ஈடுபட்டார்.


இதையடுத்து, அவர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு, பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரியங்கா, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், இன்று மீண்டும், சோன்பத்ரா வந்த பிரியங்கா, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்கள் குறைகளையும் கேட்டறிந்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

  • Rajesh - Chennai,இந்தியா

    ஆட்சியில் இருக்கும்போது எந்த ஆணியையும் பிடுங்காமல் இப்போது இதெல்லாம் வீன்.

  • JIVAN - Cuddalore District,இந்தியா

    கொலைகார கட்சியின் விசுவாசி

  • KS Dilip -

    போட்டோ எடுத்தாச்சே.... கிளம்பு கிளம்பு

    • JIVAN - Cuddalore District

      அத சொல்லவேண்டியது உங்க பாசத்துக்குரிய மோடிக்கு.

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்கோ எல்லாம் வெளிவேஷம் வூட்டுக்குவந்து டேட்டால் போட்டுகுளிப்பாள் .முப்பாட்டன்ட்லேந்து இதுபோல டிராமாக்கள் தான் அதிகம்

  • தமிழன் -

    நாட்டு மக்கள் விழித்து கொண்டு ரொம்ப நாட்களாகி விட்டது ....இனி மேலும் உங்கள் குடும்பத்தின் நடிப்பு எடுபடாது ...மக்கள் உங்களை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார்கள் ....நடந்த தேர்தல் தோல்விகளில் இருந்தே அதை தெரிந்து கொள்ளலாம் ....உங்களுக்கு எதிர் கட்சி அந்தஸ்தை கூட கொடுக்க மக்கள் விரும்பவில்லை

Advertisement