Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி: காஷ்மீர், முத்தலாக் விவகாரங்களில், காங்., ஆமை வேகத்தில் செயல்பட்டதாகவும், பா.ஜ., வேகமாக செயல்படுவதாகவும், தமிழிசை கூறுகிறார். நாங்கள் சரியானவற்றை, நிதானமாக செய்தோம். பா.ஜ., தவறானவற்றை, வேகமாக செய்கிறது.


டவுட் தனபாலு: ஜி.எஸ்.டி., துவங்கி பல்வேறு விஷயங்களுக்கு, இதையே சொல்றீங்க... எதையும் ஆரம்பிப்பது சுலபம்; அதை நிறைவு செய்ய, விடாமுயற்சியும், வேகமும் அவசியம்... அமைதிக்கும் அசமந்தத்துக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு, எந்த விவகாரத்தையும், ஜவ்வாய் இழுத்தவர்கள், நிதானத்தைப் பத்தி பேசலாமா என்பது தான், மக்களின், 'டவுட்!'


****


துணை முதல்வர், பன்னீர்செல்வம்: அரசியல் ஆதாயத்திற்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அரசை குறை கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.


டவுட் தனபாலு: நீங்க, மத்திய பா.ஜ., அரசை பாராட்டுவதும், உங்க கூட்டணி கட்சிகள், தமிழக அரசை பாராட்டுவதும், அரசியல் ஆதாயத்துக்கு தானே... இது மாதிரி தான் எல்லாமுமே என்பதில், 'டவுட்'டே இல்லை...!


****


தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை: வேலுாரில், அ.தி.மு.க.,விற்கு கிடைத்தது, வெற்றிகரமான தோல்வி; தி.மு.க.,விற்கு கிடைத்தது, தோல்விகரமான வெற்றி.


டவுட் தனபாலு: ஏன் தோற்றோம்னு யோசிக்க விடாமல், அ.தி.மு.க.,வை மடைமாற்றுவதில், ரொம்ப தீவிரமா இருக்கீங்க போல... இப்படி உசுப்பேற்ற, ரெண்டு பேர் இருந்தா போதும், தேர்தலில் பங்கெடுப்பதே, வெற்றிங்கற மனநிலைக்கு, எந்த கட்சியும் வந்திடும்கறதில், 'டவுட்'டே வேண்டாம்...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இந்த ‘வெற்றிகரமான தோல்வி’ பல்லவியை எத்தனை தேர்தலுக்குத் தான் பாடுவார் இவர் ‘பையன் ஒரு மார்க்கில் தான் பெயில்’என்னும் கதைதான்

  • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

    அண்ணே, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை எத்தனை நாளில் செய்தீர்கள். மக்கள் கருத்தை கேட்டிங்களா?

  • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

    ரொம்ப சரி. அமைதிக்கும் அசமந்தத்துக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு, எந்த விவகாரத்தையும், ஜவ்வாய் இழுத்தவர்கள், நிதானத்தைப் பத்தி பேசலாமா என்பது தான், மக்களின், 'டவுட்'

Advertisement