Advertisement

காவிரியில் வெள்ளம்; மத்திய அரசு எச்சரிக்கை

சென்னை: கனமழை காரணமாக கபினியிலிருந்து காவிரிக்கு அதிக நீர் திறக்கப்படும் என்பதால், வெள்ள அபாயம் ஏற்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய ஜல்சக்தி துறை கூறியதாவது: கர்நாடகாவின் கபினி நீர்பிடிப்பு பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் (ஆக., 14, 15) கனமழை பெய்யும். இதன் காரணமாக கபினி ஆற்றில் இருந்து காவிரிக்கு அதிக நீர் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது. கபினி ஆற்றில் அதிக நீர் திறக்கப்பட்டால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். அடுத்த 24 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு 5 முதல் 6 டி.எம்.சி., வரை நீர்வரத்து இருக்கும். இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்திறப்பு அதிகரிப்பு:இந்நிலையில் கர்நாடக அணைகளான கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து காவிரியில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 24,641 கனஅடியிலிருந்து, 75 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் 35 ஆயிரம் கனஅடி, கே.ஆர்.எஸ்., அணையில் 40 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  இவ்ளோநீர் அபரிமிதமாவதே தமிழர்களே உங்க அரசு என்ன செய்துருக்கு சேமிக்க எல்லா நீர்நிலைகளையும் துவர்வாரி வச்சுருந்தாலே போதுமே குடிநீர்க்கஷ்டம் இல்லாமல் இருக்கலாமே தமிழர்கள் எல்லோரும் வசதிகளெல்லாம் மந்திரிகள் அண்ட் ஆளாத முன்னாள் திமுகவின் வித்கள் மட்டுமேதான் நன்னாயிருக்கவேண்டுமா பொதுஜனம் என்ற பேக்குகள் ஜஸ்ட் வோட்டுப்போட்டுட்டு போயின்னே இருக்கவேண்டும் நீங்கல்லாம் சொகுசா காஸ்டலி கார்கள்லே பவனி வருவேலா ? சுடாலினுக்கு குற்றம்தான் சொல்லத்தெரியும்

  • Achchu - Chennai,இந்தியா

   எரிகுளங்களை தூர் வரலாம் ஆனா அந்த உரம் மிகுந்த வண்டல் மண்ணுக்கு மார்க்கெட் இல்லை விவசாயிகள் விவசாயமே இல்லை காசுக்கு எங்கே போவது வேணும்னா நிலத்திலே கொட்டிட்டு போங்கன்னு விட்டேத்தியா படுத்துகிட்டே சொல்றாங்க சிலர் இலவசமா தர சொல்கிறார்களே தூர்வாரி காசு பண்ணமுடியலே பொக்லைன் லாரி வாடகைக்கு கஜானாவில் ஒண்ணுமில்லை என்ன பண்றது நானூறு கோடி நாப்பது திட்டங்கள்னு ஒரு "ஒதுக்கீடு" அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்ளலாம்

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  காசுக்காசு என்று அலையும் அரசுகளால் நோ யூஸ்

 • suthathamizhan - chennai,இந்தியா

  இப்போ கர்நாடக தண்ணிய தடுக்குமா ?? தமிழ்நாட்டுக்கு தண்ணி விடாம பிளாக் பண்ணி வை பார்ப்போம் ?? இயற்கை முன்னாள் உன்னால் போராட முடுயுமா கன்னட வஞ்சகர்களே ? நாம் சரியாக இருந்தால் ஏன்... தமிழ் மக்கள் .. நாம் திருந்த மாட்டோம் ... கரை பிடித்த அரசியல் ஓட்டு போடுங்கள்

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

   அவர்களுக்கு எல்லா அணைகளும் நிரம்பி வழியுதுங்கோ உபரிநீர்த்தான் தானாவே தமிழர்க்கு உதவ ஓடிவருதுங்க மறக்க வேண்டாம் ஒன்னு பொதுமக்களே ஒண்ணுகூடி நீர்நிலைகளை சுத்தம் செய்தால் போரும் தண்ணீர் வீணாக கடலிலே போயி சேருமா ன்னு திங்க் பண்ணலாமே மந்திரிகளுக்கெல்லாம் நெறைய ஜுலி இருக்குதானே அதான் தாமசம் அவா வந்து திறப்புவிழா நடத்தி பூவெல்லாம் கட்டி பூஜை செய்யோணும்னா அவ்ளோதான் கோவிந்தா

 • Ravi - Chennai,இந்தியா

  எப்படி இருந்தாலும் காவேரிலே தண்ணீர் வராது , வந்தாலும் கடலுக்கு தான் செல்லும் , உயரே பழுக்கும் பழம் பழுத்து என்ன , காய்ந்த என்ன .

  • suthathamizhan - chennai,இந்தியா

   இப்போ கர்நாடக தண்ணிய தடுக்குமா ?? தமிழ்நாட்டுக்கு தண்ணி விடாம பிளாக் பண்ணி வை பார்ப்போம் ?? இயற்கை முன்னாள் உன்னால் போராட முடுயுமா கன்னட வஞ்சகர்களே ? நாம் சரியாக இருந்தால் ஏன்... தமிழ் மக்கள் நாம் திருந்த மாட்டோம் ... கரை பிடித்த அரசியல் ஓட்டு போடுங்கள்

  • Jaya Ram - madurai,இந்தியா

   என்னமோ மற்ற மாநிலங்களில் கரை இல்லாத மாதிரியல்லவோ பேசுகிறார் இந்தியாவிலே கரை இல்லாத மாநிலம் என்று எதுவும் இல்லை ஏதாவது ஒருவகை கரை இருந்தே தீரும் , சட்ட ஒழுங்கு , ஊழல் , மதவாதம் , இடஒதுக்கீடு , அரசியல் போட்டி. இந்நிலைமை அரசியல் கரையினால் அல்ல மத்திய அரசினை கடந்த 50 ஆண்டுகளாக நம்பி ஏமாந்தவர்கள்

 • atara - Pune,இந்தியா

  Have any one of politician now comes and say to store the Water in better way in TN. Since They have business with water pela , all just for creating Crocokidle Seen , When water is since Karnataka Terain is Slope so not possible to store water for long periods since the Ponds water stays for few months max they will be absorbed by ground slowly, so Being elevated water will naturally come to Tamilnadu. Note: In Kabini , KRS water is past 40 days for TN , Mettur by this time will be 120Feet water , So what TN people should done Dig the Mettur Dam when there is no flow mean Increase the Deep level of metur dam by another 200 feet extra since the Dam is between hill rocks. nate is Sathayamangalam Dam they can also Dig more by 200 feet. , The highways roads along with Cavery Can be done with Storage Tanks , all they donot do

Advertisement