Advertisement

மோடி ஹூஸ்டன் நிகழ்ச்சி; 40 ஆயிரம் பேர் பதிவு

ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், செப். 22ல், அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே, பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு, இதுவரை, 40 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

ஐ.நா., சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா செல்கிறார். அந்தப் பயணத்தின்போது, செப். 22ல், ஹூஸ்டன் நகரில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாட்டை, டெக்சாஸைச் சேர்ந்த இந்தியர்கள் அமைப்பு செய்து வருகிறது.


'ஹவ்டி மோடி' என்ற பெயரில், ஹூஸ்டனில் உள்ள பிரமாண்ட கால்பந்து மைதானத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அதே நேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்போர், தங்களுடைய பெயர்களை பதிவு செய்து, 'பாஸ்' பெற வேண்டும். இதுவரை, 40 ஆயிரம் பேர் தங்களுடைய பெயரை முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் எதிர்பர்க்கின்றனர்.


இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் ஒன்றான, ஹூஸ்டனில் மட்டும், ஐந்து லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இதற்கு முன், 2014ல் நியூயார்க் மேடிசன் சதுக்கத்திலும், 2016ல் சிலிக்கான் வேலியிலும், அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்புகள் நடந்துள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

  • sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ

    எனக்கு ஈமெயில் மூலம் பதிவு செய்யும் படி ஒரு கோவிலில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டது. அந்த கோவிலுக்கு நன்கொடை அளித்தது என்னுடைய தவறு என்று என்னை நானே நொந்துகொண்டு பதிவு செய்யாமல் ஈமெயில்லாய் அஸித்தேன் கடவுள் மீது கோபத்துடன்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    தமிழ் நாடு தவிர மோடிஜிக்கு உலகெங்கும் புகழ் கொடிகட்டி பறக்கிறது. கிணற்று தவளைக்கு தாமரை என்றால் தெரியுமா, ரோஜா என்றால் புரியுமா?

    • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

      தமிழர்களில் திமுக அண்ட் அதிமுக அனுதாபிகளுக்கும் இந்தகட்ச்சிகளின் அடிவருடிகளும் தவிர உண்மையான தேசம் நன்னாயிருக்கணும் என்று நம்பவா எல்லோரும் பிஜேபி அண்ட் மோடி அமீத்ஷாவை நம்புகிறோம் நம்ம நாடு நன்னாயிருக்கு இப்போது தமிழ்நாடுதான் கேவலமா மது என்ற டாஸ்மாக் அரக்கனிடம் சிக்குண்டு நாசமா போயிண்டுருக்கு எவ்ளோ கேவலம்கள் இருக்கோ அனைத்தும் அரங்கேறுது டாப் டு டௌன் இந்தமாதிரி அவலம்கள் நாடுமுழுக்க இருந்தாலும் தமிழ்நாடு தான் முதல் இடம்

  • vinegan - salem,இந்தியா

    மக்கள் பணத்தில் சுயவிளம்பரமே வாழ்க்கை

    • Natarajan Attianna - Coimbatore,இந்தியா

      சிங் உலகம் சுற்றியது காங்கிரஸ் காரனுக பணமா ?

  • J.Isaac - bangalore,இந்தியா

    அமெரிக்காவில் போய் பந்தா காட்டினால் ஆப்பு வைக்க போகிறார்கள்

    • Natarajan Attianna - Coimbatore,இந்தியா

      வயிறெரியுதோ கிணற்றுத்தவளைகளுக்கு கத்தத்தான் தெரியும்

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    அனுமதி இலவசமா அல்லது ஒரு பெரிய தொகை உண்டா...??

    • Vinoth - Hyderabad,இந்தியா

      Rs.200 + பிரியாணி குடுக்கிறாங்களாம்

    • Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ

      பாதுகாப்பு ..இட வாடகை ..மின்சார செலவு … குடிநீர் மற்றும் டாய்லெட் வசதிகள் ...பார்க்கிங் போன்ற செலவுகளுக்கு நண்கொடை வசூலிப்பதில் என்ன தவறு … அமெரிக்காவில் இலவசம் என்பதே கிடையாது …

    • Velinaattu Matharasi - Phoenix,யூ.எஸ்.ஏ

      கமெண்ட் போடுவதற்கு முன் செய்தி என்ன என்பதை முதலில் படிக்கவும்

    • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

      இது என்ன திருட்டு முன்னேற்ற கழகமா. எல்லாத்துலயும் காசு பார்க்க.

Advertisement