Advertisement

நெல்லை தம்பதிக்கு அமிதாப், ஹர்பஜன் பாராட்டு

சென்னை: கொள்ளையர்களை அடித்து விரட்டிய வயதான நெல்லை தம்பதிக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கடையம், கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல்(78), அவர், 4 ஏக்கரில் எலுமிச்சை தோட்டம் அமைத்து, வீடு கட்டி, மனைவி செந்தாமரையுடன் (70)வசித்து வந்தார். நேற்று முன்தினம்(ஆக.,11) இரவு 9 மணிக்கு வீட்டு முற்றத்தில், சண்முகவேல் அமர்ந்திருந்த போது, கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து தாக்கினர்.
இதனையடுத்து இருவரும் பிளாஸ்டிக் சேர் உள்பட சிக்கிய பொருட்களை எடுத்து வீசி தாக்கினர். இதனால், சிக்கி கொள்வோம் என பயந்த கொள்ளையர்கள், செந்தாமரையின் கைகளை அரிவாளால் தாக்கி 4 சவரன் நகையுடன் தப்பினர். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனை பார்த்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர், அந்த முதியவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த வீடியோ காட்சிகளை மேற்கோள் காட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.



கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவு




இதனிடையே, சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லை எஸ்.பி., அருண்குமார், முதிய தம்பதியை பாராட்டியதுடன், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

  • Muraleedharan.M - Chennai,இந்தியா

    இந்த திருட்டில் பங்கு திமுக மட்டுமில்லை, . அதிமுகவும் உடந்தை. வெளியில் பாத்தால் எதிரி . உள்ளுக்குள் கூட்டு .

  • sankar - Nellai,இந்தியா

    அந்த பெரியவர் இன்று இருந்தால் என்ன சொல்வார் தெரியுமா - "வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் - இப்படி செய்வது அவர்களின் குற்றமல்ல" என்று - நல்லவேளை

  • Sanjay - Chennai,இந்தியா

    சந்தேகமேயில்லை, திருட வந்தவர்கள் திமுக குண்டர்கள் தான்

    • Pannadai Pandian - wuxi,சீனா

      பிரியாணி தயார் செய்து வைக்காதது தம்பதியர் குற்றம்…..பேசாம தின்னுட்டு போயிருப்பானுங்க….

  • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

    ஊரின் ஒதுக்குப்புறத்தில் குடி இருப்போரையும், தனியாக இருக்கும் வயதான தம்பதிகளையும் நமது காவல் துறை வீரர்கள் சிறப்பு கவனம் கொண்டு ரோந்து பணிகளை தீவிரமாக்கவேண்டும். கயவர்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் நன்றாக 'கவனித்து' பின்னர் கேஸ் போடவும்.

  • TamilArasan - Nellai,இந்தியா

    இதுதான் எம் இந்தியா தமிழனின் பெருமையை மெய்சிலிர்க்கும் எம் வட இந்திய சகோதரன் - ஆனால் எம் மாநிலத்திலோ சில அறிவீலிகள் நாட்டை துண்டாடுவதிலே, மக்களிடம் பிரிவினையை தூண்டுவதிலே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள்...

Advertisement