Advertisement

கொள்ளையரை விரட்டிய 'வீர தீர' முதிய தம்பதிக்கு பாராட்டு

திருநெல்வேலி : கடையத்தில், பண்ணை வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர் இருவரை, அங்கிருந்த, வயதான தம்பதி, சேர்களை துாக்கிய அடித்து விரட்டிய காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், கடையம், கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர், சண்முகவேல், 78; அம்பாசமுத்திரம், 'மதுரா கோட்ஸ்' ஆலையில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். இவர், அங்கு, 4 ஏக்கரில், எலுமிச்சை தோட்டம் அமைத்து, வீடு கட்டி, மனைவி செந்தாமரையுடன், 70, வசிக்கிறார். இவர்களது, இரண்டு மகன்கள், மகள் ஆகியோர், சென்னை மற்றும் பெங்களூரில் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, வீட்டு முற்றத்தில், சண்முகவேல் உட்கார்ந்திருந்தார்.

அப்போது மறைந்து வந்த, முகமூடி அணிந்த நபர், சண்முகவேலின் கழுத்தில், துண்டை போட்டு, இறுக்கி கொல்ல முயன்றார். அவர் சப்தம் கேட்டு, வீட்டுக்குள் இருந்த, செந்தாமரை ஓடிவந்து, அந்த நபர் மீது செருப்பு, பிளாஸ்டிக் சேர் ஆகியவற்றை துாக்கி வீசினார். அப்போது, மறைந்திருந்த இன்னொரு முகமூடி நபரும், அந்த தம்பதியை தாக்க முயன்றார்.


கொள்ளையன் பிடியில் இருந்து தப்பிய, சண்முகவேலுவும், கொள்ளையர்களை நோக்கி, சேர்களை துாக்கி வீசினார். கொள்ளையர், அரிவாளால், தாக்க முயற்சித்தனர். இருந்தாலும் தம்பதி, துணிச்சலாக, சளைக்காமல் எதிர்த்து போராடினர். சிக்கிக் கொள்வோம் என, பயந்த கொள்ளையர், செந்தாமரையின் கையில், அரிவாளால் வெட்டி, 4 சவரன் செயினை பறித்து, தப்பினர். இதில் அவருக்கு, லேசான காயம் ஏற்பட்டது.

போலீசார் விசாரணையில், கொள்ளையர், அதே பகுதியை சேர்ந்தோர் என, தெரிந்தது. இந்த காட்சிகள், வீட்டில் இருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த, 'வீடியோ' பதிவுகள், சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. கொள்ளையருக்கு எதிராக வீரமுடன் போராடிய, முதிய தம்பதிக்கு, பாராட்டுகள் குவிகின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  அப்புடியே நம்ம மாநிலத்துலப் பகல் கொள்ளையடிச்சிக்கிட்டு இருக்குற எல்லா அரசியல் வாந்திகளையும் ஒரு வாட்டி விளாரி எடுத்துப் போடுங்க.

 • Pannadai Pandian - wuxi,சீனா

  இவர்கள் தனியே தோட்டத்தில் வசிக்கிறார்கள். அவசியம் ரெண்டு ராட் வீலர் நாய்களை வளர்ப்பது அவசியம். பகலில் கட்டி போட்டுவிட்டு இரவில் அவிழ்த்து விட வேண்டும். இந்த நாய்கள் எப்படிப்பட்ட திருடர்களாக இருந்தாலும் ஆவேசமாக தாக்கி விரட்டி விடும். CCTV கேமரா அவசியம் தான்….ஆனால் அது நாம் எப்படி சாகிறோம் என்றுதான் படம் எடுக்கும், காப்பாத்தாது. ரெண்டு மூன்று ராட்வீலர்கள் திருடர்களை துரத்தி அடிக்கும்.

 • tamilan - கோயம்புத்தூர்,இந்தியா

  இதற்கு பொறுப்பேற்று எடப்பாடியார் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின்.. இந்த கொள்ளையர்களை திமுகவிலிருந்து ஸ்டாலின் விலக்குவாரா? - எடப்பாடியார்

 • நக்கல் -

  திருநெல்வேலி காரங்க தைரியமானவங்கதான்... இவர்கள் தங்கள் உயிரை பணயம் வெச்சு அடித்து விரட்டினார்கள்... அருவாள் கொண்டு வந்தவர்கள் வெட்டும் எண்ணத்தில் வரவில்லை, வெறும பயமுறுத்தவே கையில் வைத்துக் கொண்டிருந்தார்கள்... உயிரை விட எதுவும் பெரிதல்ல.. ஜாக்கிரதையாக இருப்பது நல்லது...

 • karutthu - nainital,இந்தியா

  தமிழக அரசு இவர்களை கௌரவிக்கும் வகையில் வரும் சுதந்திர தினத்தன்று இவர்களை பாராட்டி பரிசு வாழவேண்டும்

Advertisement