Advertisement

குமரியில் இந்து அமைப்புகள் கொண்டாட்டம்

நாகர்கோவில்: காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு நடவடிக்கையை பாராட்டி, இந்து அமைப்புகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.



காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, காஷ்மீர்,லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.
மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, குமரி பகவதி அம்மன் கோயில் சன்னதி தெருவில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து அமைப்புகள் சார்பில், சுற்றுலா பயணிகள், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இந்து முன்னணி துணைதலைவர் அசோகன், ஒன்றிய தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement