Advertisement

"காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்பது நோய் தீர்வதற்கான மருந்து": முன்னாள் மத்திய அமைச்சர் தகவல்

நாகர்கோவில்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்பது நோய் தீர்வதற்கான மருந்து என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


குமரி மாவட்டம், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி: பார்லிமென்டில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தங்கள் மூலமாக மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித்ஷாவுக்கு வாழ்த்துகள். காஷ்மீரில் 70 ஆண்டுகள் இல்லாத முன்னேற்றத்தை இந்த நடவடிக்கை கொண்டு வரும். இளைஞர்களின் வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், நாட்டு மக்களுடன் இணைந்து வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் மக்களின் கனவு நனவாகியுள்ளது. பார்லிமென்டில் சிலர் இதை திணிப்பு நடவடிக்கை என கூறுகின்றனர்.


ஆனால் இது நோய் தீர்வதற்கான மருந்து. தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக, சில அமைப்புகள் இங்கு செயல்படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவதற்கு கோரிக்கை விடுக்கும் வைகோ, தமிழகம் மின்சாரத்துக்கு பிற மாநிலங்களிடம் பிச்சையெடுக்க வேண்டும் என விரும்புவதாக தெரிகிறது. குமரியில் மேற்கொண்டு மேம்பாலங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதில்லை என தேர்தலின்போது வாக்குறுதியளித்த காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார், தற்போது இங்கு பாலம் வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement