Advertisement

நாகர்கோவில் வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 1.2 டன் ரேஷன் அரிசி

நாகர்கோவில்: கேரளா மாநிலம், திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 1.2 டன் ரேசன் அரிசியை நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


குமரி மாவட்டத்தில் இருந்து, கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதை தடுப்பதற்கு பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்கின்றன.இந்நிலையில், நேற்று கோவையில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளா மாநிலம், திருவனந்தபுரம் செல்லும் ரயிலில், கேட்பாரற்று நிலையில் 48 மூட்டைகளில் 1.2 டன் ரேசன் அரிசி இருந்தது. நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய சோதனையின் போது, ரேஷன் அரிசி மூட்டைகள் சிக்கின. இவற்றை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரேஷன் அரிசியை யார் கடத்தி வந்தது என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement