Advertisement

கர்நாடகா அரசுக்கு கவுன்ட் டவுன் துவக்கம்

பெங்களூரு : கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 23 )மாலை 6 மணிக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும் என அம்மாநில சபாநாயகர் ரமேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிருப்தி எம்எல்ஏக்கள் :



கர்நாடகாவில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது கடந்த வியாழக்கிழமை முதல் விவாதம் நடைபெற்று வருகிறது.

மாலை 6 மணிக்கு ஓட்டெடுப்பு :



இன்று காலை 10 மணி முதல் மீண்டும் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் மாலை 4 மணிக்குள் விவாதங்களை முடித்துக்கொள்ள சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஒருநாள் ஒத்திபோடப்பட்டது:



செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., கர்நாடகா எம்.எல்.ஏ., ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், ''குமாரசாமி அரசு இன்றுடன் முடிவுக்கு வந்துவிடும். நேற்றே முடிவுக்கு வந்திருக்க வேண்டிய நிலையில் ஒருநாள் ஒத்திப்போடப்பட்டுவிட்டது, '' என்றார்.

4 வார அவகாசம் வேண்டும் :



இதனிடையே கொறடா உத்தரவுக்குப் பின்னும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிலையில், அவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது எனக் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இன்று(ஜூலை 23) காலை 11 மணிக்கு தன் முன் நேரில் ஆஜராகவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.ஆனால் அவர்கள் நேரில் ஆஜராகவில்லை. மாறாக 13 எம்.எல்.ஏ.க்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் தாங்கள் சபாநாயகர் முன் ஆஜராவதற்கு 4 வார அவகாசம் கோரியுள்ளனர்.

கவுன்ட் டவுன் துவங்கியது :



எனவே, 15 எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத நிலையில், தனிப்பெரும் கட்சியான பா.ஜ.,வுக்கு மட்டுமே 105 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, குமாரசாமி அரசு உறுதியாக கவிழும். சபாநாயகரின் ஓட்டெடுப்பு அறிவிப்பிலிருந்தே, அரசு கவிழ்வதற்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டதாக, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூறியுள்ளனர்.
சுப்ரீம்கோர்ட் நம்பிக்கை
இதற்கிடையில் சுயேச்சை எம்எல்ஏ.,க்ள் தாக்கல் செய்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தலைை நீதிபதி ரஞ்சன் கோகை , இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும் என தான் நம்புவதாக கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (19)

  • Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ

    கோர்ட் குமாரசுவாமி கோரிக்கை படி 4 மாதம் அவகாசம் கொடுக்கலாம் .

  • Indhuindian - Chennai,இந்தியா

    பாம்புக்கும் கீரிக்கும் கூட சண்டை விட்டுடுவான் போல இருக்கு ஆனா இங்க ஓட்டெடுப்பு எப்போ சும்மா பேசிக்கிட்டே இருந்த எப்பிடி சீக்கிரம் முடிஞ்சுதுன்னா நம்ம வேலைவெட்டிய பாக்கலாமுல்லெ

  • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

    அடுத்தது மேற்கு வங்கமா?

  • Rajan - Alloliya ,இந்தியா

    குமாரு நீ ஒன்னும் கவலை படாதே, சூசை உனக்கு 20 mla கொடுப்பாரு

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    கர்நாடகாவில் மூன்று கட்சியுமே நல்லா நடிக்கிறாங்க. வெளியே நிற்கும் 13 எம் எல் ஏ க்களும் 6 மணிக்கு ஓட்டெடுப்பின்போது உள்ளேவந்து...ஹய்யா இருக்கு ஒரு ரகளை. நேரடி ஒளிபரப்பு செய்தால் மக்கள் கண்டு பரவசப்படுவார்கள். எம்.எல் ஏ களின் மக்கள் தொண்டு எத்தகையது என்பதை...

Advertisement