Advertisement

மதுரை- ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை

மதுரை : வரும் ஜூலை 30 முதல், ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

ஆடி அமாவாசை வரும் ஜூலை 31 புதனன்று வருகிறது. வழக்கமாக அந்நாளில், புனிதத்தலமான ராமேஸ்வரத்திற்கு பக்தர்கள் அதிகமாக செல்வர். எனவே, பயணிகளின் வசதிக்காக, மதுரை முதல் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு ரயில், முன்பதிவு இல்லாமல், வரும் ஜூலை 30 அன்று, இரவு 11.55 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement