Advertisement

அபியின் விமான சாகசம்: வீடியோ கேமில் பரவசம்

புதுடில்லி : இந்திய விமானப்படையின் வீரசாகசம் மிக்க வீடியோ கேம் வரும் ஜூலை 31 ல் வெளியிடப்பட உள்ளது. அதற்காக வெளியிடப்பட்ட டீசர் இந்திய இளைஞர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஹீரோ அபிநந்தன் :



விமானப்படை சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசரில், இந்தியாவின் அதிநவீன போர்விமானங்களில் சென்று, எதிரிகளின் எல்லைக்குள் புகுந்து அவர்களது விமானங்களை சிதறடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 101 நிமிடங்கள் ஓடுகிறது இந்த வீடியோ, இந்திய விானப்படை வீரர் அபிநந்தன், பாக்கிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து விமானங்களை சுட்டு வீழ்த்தி 60 மணி நேரம், பாக்., ராணுவத்தின் பிடியில் இருந்து பின்னர் மீண்டார்.

தனி நபர் விளையாட்டு :



அதன் பின்னர் இந்திய இளைஞர்களிடம் ஹீரோவான அபிநந்தனே, இந்த வீடியோ கேமிலும் காட்டப்படுகிறார். இப்போது தனிநபர்கள் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில், பலர் இணைந்து விளையாடும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

32 ஆயிரம் பேர் ஆர்வம் :



இந்திய விமானப்படையின் டுவிட்டர் தளத்தில், கடந்த ஜூலை 20 அன்று இந்த வெளியிடப்பட்ட டீசர், ஜூலை 22 மாலை வரையில் 32 ஆயிரம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்தி 752 லைக்குகளை பெற்றுள்ளது. தற்போது ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் வகை மொபைல் போன்களில் ஜூலை 31ல் வெளியிடப்பட உள்ள வீடியோ கேமை விளையாட முடியும்.

சாகசத்தின் மீதான தாகம் :



ஏற்கனவே, வீடியோ கேம்களை விளையாடுவதில் ஆர்வமுடைய இந்திய இளைஞர்களிடையே விமானப்படையின் இந்த வீடியோ, வீரத்தையும், எதிர்காலத்தில் ராணுவத்தில் இணைந்து சாகசத்தில் ஈடுபடவேண்டும் என்ற தாகத்தையும் உருவாக்கும் என்று விமானப்படை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • Sriniwasen Vk -

    please do your duty to save us.. dont entertain us thanks

  • susainathan -

    ashamed for armies because of this game

  • DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

    அதிநவீன விமானமா .. அதை இனிமே தானே வாங்க போறோம்.. அவரு ஓட்டை உடைசல் மிக் விமானத்தை எடுத்து போனாரு.. ஒருவேளை அதிநவீன விமானத்தை எடுத்து போயிருந்தா அவரு பிடி பட்டிருக்க மாட்டாரு.. கதையே வேறு மாதிரி போயிருக்கும்..

  • Suri - Chennai,இந்தியா

    பீ ஜெ பீ ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் அபிநந்தனுக்கு சிலை வைத்து நன்றி கடனை தீர்க்க வேண்டுகிறேன்.

    • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

      அவரை உசுரோட மீட்டத்தே அவருக்கு நன்றி கடன் தான்....நீ இங்க வந்து குறுக்கு சால் ஒட்டாதே..

    • DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

      புலவாமா மற்றும் அபிநந்தனை வைத்தே காங்கிரஸ் அரசியல் லாபம் அடைய பார்த்தது.. பாவம் என்ன செய்ய . கடைசியில் இம்ரானுக்கு தூபம் போடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.. இம்ரான் ஒரு ராஜதந்திரி என்றெல்லாம் சொல்லி பார்த்தது.. எந்த பருப்பும் வேகலியே...

    • Azhagan Azhagan - Chennai,இந்தியா

      சுக்கு கஷாயம் குடி. வயித்தெரிச்சல் இன்னும் அதிகமாகும்

Advertisement