Advertisement

பா.ஜ., பார்லி., குழு ஆலோசனை

புதுடில்லி: காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக பார்லிமென்டில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என்றும் காங்., இடதுசாரி உள்ளிட்ட எதிர்கட்சியினர் சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
பார்லி.,யில் அமளி நடந்து வரும் வேளையில் எதிர்கட்சியினரை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து விவாதிப்பதற்காக பா.ஜ., பார்லி., குழு அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.


உபி.,யில் நடந்த இரு தரப்பினர் மோதல் காரணமாக நடந்த உயிரிழப்புக்கு மாநில அரசே காரணம் என காங்., குற்றம்சாட்டுகிறது. இது தொடர்பாக நேற்று பார்லி., இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் எழுப்பினர். மேலும் அமெரிக்க அதிபரின் மத்தியஸ்தம் தொடர்பான பேச்சு குறித்து எதிர்கட்சிகள் விளக்கம் கேட்டுள்ளன.


இந்நிலையில் இன்று கூடியுள்ள பா.ஜ., பார்லி., குழு முக்கியமானதாக கருதப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ

    பாராளுமன்றத்தில், காங்கிரஸ் காரர்களும் .... ஒன்னு..ஒரு வேலை செய்ய விடமாட்டார்கள்..

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    பாஜக பார்லிமென்ட் குழு எதற்காக கூட வேண்டும்? அமித் ஒரு ஆணை பிறப்பித்து சி பி ஐ, அமலா துறை , வருமான வரித்துறை ஆகிய அனைத்து துறைகளையும் முடுக்கி விட்டால் போதுமே.

Advertisement