Load Image
Advertisement

திண்டுக்கல்லில் பாரம்பரிய எருது ஓட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே பெரும்புள்ளி கோட்டைப்பட்டியில் கம்பளத்து நாயக்கர்களின் குலதெய்வ வழிபாட்டில் பாரம்பரியஎருது ஓட்டம் நடந்தது.

கம்பளத்து நாயக்கர்களின் தெய்வ வழிபாடு தனித்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு ஊரிலும் குலதெய்வ வழிபாட்டிற்கென்று சாமி மாடுகளை வளர்க்கின்றனர். வழிபாட்டின் முக்கிய நிகழ்வு எருது ஓட்டம்தான். பெரும்புள்ளி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக குலதெய்வ வழிபாடு நடந்தது. இதில் எருதுகளுக்கு மாலை அணிவித்து 'கொத்து கொம்மு' என்ற எல்லையில் இருந்து ஓட்டி விட்டனர். எந்த எருது மாத்து(துணி) விரித்திருக்கும் இடத்தை முதலில் தாண்டுகிறதோ அந்த எருது வெற்றி பெற்றதாக கருதப்படும்.

இதையொட்டி 200 க்கும் மேற்பட்ட எருதுகள் ஓட்டத்தில் பங்கேற்றன. வெற்றி பெற்ற எருதுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் பழம், கரும்பு கொடுத்து மரியாதை செய்யப்பட்டது. இசை
வாத்தியங்கள் முழங்க தேவராட்டம் நிகழ்ச்சியும் நடந்தது.

இது குறித்து மந்தை நாயக்கர் தலைவர் நாகமுத்து கூறுகையில்,' எங்கள் குலதெய்வ வழிபாட்டில் எருது ஓட்டம் நிச்சயம் இடம் பெறும். எருதும் தெய்வம் மாதிரி தான். கம்பளத்தார் இருக்கும் மந்தைகளுக்கு (தலைமையிடம்) எலுமிச்சை பழம் கொடுத்து அழைப்பு விடுப்போம்.
வழிபாடு முடியும் வரை அவர்களுக்கும், எருதுகளுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுப்போம். 25 ஆண்டுகளுக்கு பின் எருது ஓட்டத்தை நடத்தியிருக்கோம். இது சமூக நல்லிணக்கத்தை சுட்டிக் காட்டும், ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் விழா' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement