Load Image
Advertisement

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது; கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்வதால்

ஒட்டன்சத்திரம் : கேரளாவில் பருவமழை அதிகரித்துள்ளதால், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.


ஒட்டன்சத்திரம் மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள், இங்குள்ள மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இவற்றில் 70 சதவீதத்திற்கும் மேல் கேரள வியாபாரிகளே வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வியாபாரம், பெரும்பாலும் கேரளாவையே சார்ந்துள்ளது. அங்கு கடையடைப்பு செய்யப்படும் நாட்களில் இங்கு வியாபாரம் பாதிப்பது வழக்கம்.


தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கேரள வியாபாரிகள் காய்கறிகள் வாங்கும் அளவை வெகுவாக குறைத்து விட்டனர். இதல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை, கத்தரி உட்பட பல காய்களின் விலை சரிந்துள்ளது. கடந்த திங்களன்று ஒரு கிலோ செடி முருங்கை ரூ.48 க்கு விற்றது. இதன் நேற்றைய விலை ரூ. 30. இதேபோல் ரூ.8.35 க்கு விற்ற டிஸ்கோ கத்தரி ரூ.5.70 க்கு விற்றது. கிலோ ரூ.17 க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.11 க்கும், ரூ.40.70 க்கு விற்ற தக்காளி ரூ.21.45 க்கும் விற்றது.


''ஒட்டன்சத்திரத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் காய்கறிகளை லாரிகளில் இருந்து இறக்குவதற்கே பல மணிநேரங்கள் ஆவதாக'' வியாபாரிகள் கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement