Advertisement

நாய்க்கு ஆப்ரேஷன் செய்து காப்பாற்றிய மேனகா

புதுடில்லி: சுற்றுச்சூழல் மற்றும் விலங்கின ஆர்வலரான மேனகா கட்டியால் அவஸ்தைப்பட்ட நாய் ஒன்றுக்கு ஆப்ரேஷன் செய்து காப்பாற்றியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மோடி தலைமையிலான முன்னாள் அமைச்சரவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் மேனகா. தற்போது அவர் சுல்தான்பூர் எம்பி.,யாக உள்ளார். இவர் ஒரு விலங்கு நல பிரியர். விலங்கினங்கள் துன்பப்பட்டால், தாமாக முன்வந்து உதவிகள் செய்யக்கூடியவர்.

நேற்று (20.09.2019) நாய் ஒன்று வயிற்று வெளிப்பகுதியில் பெரிய கட்டி ஒன்றால் சிரமப்படுவதாக அவருக்கு தவகல் கிடைத்தது. உடனடியாக தனது உதவியாளர்களிடம் சொல்லி அந்த நாயை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார். அதனையடுத்து டாக்டர்கள் மயக்க மருந்து கொடுத்து வயிற்றுக்கட்டியை அப்புறப்பபுடுத்தினர். தற்போது நாய் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

எந்தவொரு உயிரினத்தையும் பிரதிபலன் பாராமல் காப்பாற்றும் அக்கறை கொண்ட மேனகாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • oce - tokyo,ஜப்பான்

  ஜீவ காருண்யம் காட்டுவது இயல்பானசெய்கை. அது விளம்பரமல்ல.

 • oce - tokyo,ஜப்பான்

  பாதுகாப்பின்றி காட்டு வழியில் போகும் என்னை துஷ்டமிருகங்கள் தாக்கினால் நான் அவைகளை எதிர்த்து தாக்குவதற்கு பதிலாக அவைகளை கட்டி அணைக்க முடியுமா. கொத்தி பிடுங்கும் நல்ல பாம்பையும் மனிதரை கடிக்கும் வெறி பிடித்த நாசய்களையும் அடிக்காமல் வாரி அணைக்க முடியுமா. இது மனித பகுத்தறிவுக்கும் பண்பாட்டுக்கும் முரணான செயலல்லவா. ஜீவ வகார்ணயம் இருப்பவர் புத்தரைப் போல் எந்த உயர்அரசு பதவியிலும் இன்றி சாமியாராக போக வேண்டியது தானே. உலக பந்தங்களை அறவே வெறுப்பவர்களிடம் தான் ஜீவகாருண்யம் குடி இருக்கும்.

 • oce - tokyo,ஜப்பான்

  ஜீவ காருணயம் என்பதில் பிரிவினை இருப்பது அர்த்தமற்றது. இறைவனால் படைக்கப்பட்ட உலக உயிரினங்கள் அனைத்தும் ஒன்றே. படைப்பில் வித்தியாசம் இருக்கலாம். வேறு பாடு காட்டுவது தவறு. தன்னை சுட்டவனையும் மன்னிக்க வேண்டியவர் காந்தி. அதனால் அவர் மகாத்மா என்றழைக்கப்பட்டார். தனக்கு எதிராக இருக்கும் மனிதர்களிடம் மனமாச்சர்யமின்றி அன்பு செலுத்துவது மனித பண்பு.அதை விட்டு மற்ற உயிரினங்களிடம் மட்டும் அன்பு செலுத்துவது எந்த தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை எவராலும் விளக்க முடியாது.

 • SENTHIL - dammam,சவுதி அரேபியா

  ஏழ்மையானவர்கள் வசதி இல்லாத காரணத்தால் தங்கள் உடம்பில் உள்ள கட்டியோ அல்லது நோயையோ குணப்படுத்த முடியாமல் இறந்துகொண்டிக்கிறன்றனர் . இவர்களைவிட இங்கு நாய்தான் முக்கியமாக உள்ளது.முதலில் வறிய மனிதர்களை காப்பாற்றுங்கள்

 • oce - tokyo,ஜப்பான்

  நாட்டிலுள்ள ஏழை பாழைகளில் எத்தனை பேர்கள் இப்படி நோய்களால் அவதிபடுகிறார்கள். அவர்களெல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை. மனித உயிர்களை காப்பாற்ற வழி தேடாமல் மிருக உயிர்களை காப்பாற்றுவதில் அக்கறை செலுத்துவது பைத்தியக்கார தனம். நல்ல பாம்பு சிங்கம் புலி கரடி முதலை மற்றும் பல உலகிலுள்ள விஷ ஜந்துக்களை எல்லாம் இப்படி காப்பாற்றிக்கொண்டிருந்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்த சமுதாயத்தின் கடை கோடி விளிம்பில் உயிர் ஊசலாடும் மக்களை யார் காப்பாற்றுவது. இவருக்கு ஒரு மந்திரி பதவி வேறு தந்திருக்கிறார்கள். மனிதர்களை காப்பாற்றினால் செய்த பாவம் தீரும். விஷ ஜந்துக்களை காப்பாற்றினால் பாவம் சேரும். இவர் இளமை காலத்திலேயே சஞ்சயை இழந்தவர்.

Advertisement