Advertisement

கேரளத்தில் விண்வெளி பூங்கா அமைக்க திட்டம்

திருவனந்தபுரம் : நாட்டிலேயே முதலாவதாக, 'இஸ்ரோ'வுடன் இணைந்து, திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க, கேரளா அரசு திட்டமிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில், 'இஸ்ரோ'வின் முக்கிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி.,) உள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இங்கு முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றியவர். வி.எஸ்.எஸ்.சி., நிதியுதவியுடன் திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க இருப்பதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, திருவனந்தபுரத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் அறிவு நகரம் (நாலேட்ஜ் சிட்டி) அமைக்கும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அதில், 20 ஏக்கர் நிலத்தில்,நாட்டிலேயே முதலாவதாக விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது.
இந்த விண்வெளி பூங்காவில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவு மையம், விண்வெளி அருங்காட்சியகம் மற்றும் விண்வெளி சார்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறை செயலர் சிவசங்கர் கூறுகையில், ''விண்வெளி பூங்கா திட்டப்பணிகள் நிறைவேறும்போது, நாட்டின் விண்வெளி தொழில்நுட்பத்தில் கேரளா முக்கிய பங்கு வகிக்கும். இத்துறையில் பல வேலைவாய்ப்புகள் உருவாகும்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

  • vnatarajan - chennai,இந்தியா

    தமிழகத்தில் விண்வெளி பூங்கா அமைக்கத்தொடங்கினால் எதிர் காட்சிகள் விவசாயிகளை தூண்டிவிட்டு பூங்கா வரவிடாமல் வேடிக்கை பார்ப்பார்கள். தடுப்பணைகள் கட்டுவதற்கே கிராம மக்கள் எங்கள் ஊர் ஏரிகளுக்கு தண்ணீர் வருவது நின்றுவிடும் என்று கூவுகிறார்கள். அணைகள் கட்டினால் மழைக்காலங்களில் பெய்யும் அதிக மழை நீரை வீணாகாமல் தடுப்பணைகளில் சேமித்துவைத்து ஏரிகளுக்கு தேவைப்படும்போது திறந்து விடுவார்கள். மேலும் பூமிக்கடியில் அந்தந்த ஏரியாவில் நீர் மட்டமும் உயரும் குழாய் கிணறுகளில் நீரும் வற்றாது. இது விவசாயிகளுக்கும் கிராம மக்களுக்கும் தெரியாதது அல்ல.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    ஹலோ, ஹை.பாத் நாத்தன்..., பொறாமையாக இருக்கிறதா..ஹா ஹா ஹா. அதான் உங்க ஊரில் பிர்லா ப்ளானடோரியம் இருக்கே.

  • Babu Desikan - Bangalore,இந்தியா

    தமிழகத்தில் எதையும் நிறுவ விட மாட்டோம். எந்த திட்டத்தையும் செயல் பட விட மாட்டோம். தமிழகம் புறக்கணிக்கப் படுகிறது என்று போராட்டம் மட்டும் நடத்துவோம்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    வாங்க.. தமிழகத்தை தாழ்த்தி தமிழர்களை அவமானப்படுத்தி எழுதுங்கள். எல்லா மாநிலங்களிலும் வரணும். பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லாமல் இருக்க வேண்டும். மாநில மொழிகளிலும் விளக்கங்கள் இருக்க வேண்டும். இதுபோன்ற ஆலோசனைகள் அல்லது உற்சாகப் படுத்தி எழுத விழைகிறேன்.

  • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

    We need more temples, churches, mosques, Buddha vihars to bring discipline and keep tasmac away. All guys must go to their worship places daily. But only worship but no conversion speach inside or publicly. Tasmac must be closed.

Advertisement