Advertisement

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் காங்கிரசார்

பல்லாவரம்: காங்., பொதுச்செயலர் பிரியங்கா, கைது செய்யப்பட்டதை கண்டித்து, பல்லாவரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய, காங்., கட்சியினர், 250 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.உத்தர பிரதேசத்தில், சொத்து தகராறு தொடர்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டில், காயமடைந்த பழங்குடியினருக்கு, ஆறுதல் கூற, காங்., பொதுச்செயலர் பிரியங்கா, நேற்று முன்தினம் அங்கு சென்றார்.அப்போது, பிரியங்காவின் காரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரை அனுமதிக்கவில்லை. கட்சி நிர்வாகிகளுடன், தரையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்காவை, போலீசார் கைது செய்தனர்.இச்சம்பவத்தை கண்டித்து, பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே, காங்., காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில், நேற்று காலை, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இதில், தமிழக, காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பலர் பங்கேற்று, கண்டன உரையாற்றினர். இதற்கிடையே, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, காஞ்சி வடக்கு மாவட்ட காங்., தலைவர், ரூபி மனோகரன் உள்ளிட்ட, 250 பேர் மீது, பல்லாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement