Advertisement

கொலை முயற்சி வழக்கு தி.மு.க., பிரமுகர் கைது

தேனாம்பேட்டை: கொலை முயற்சி வழக்கில், தி.மு.க., பிரமுகர் உள்ளிட்ட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.தேனாம்பேட்டை, விஜயராகவபுரம் சாலையைச் சேர்ந்தவர், ஸ்ரீதர், 60; தொழிலதிபர். தேனாம்பேட்டை ஆந்திரா கிளப் அருகே, 6ம் தேதி, மர்ம கும்பல், கிரிக்கெட் மட்டையால், ஸ்ரீதரை அடித்துக் கொலை செய்ய முயன்றது.இதில், ஸ்ரீதர் தப்பினார். தேனாம்பேட்டை போலீசார் விசாரித்ததில், 'ஆந்திரா கிளப்' தேர்தல் தொடர்பாக, ஸ்ரீதருக்கும், ஜனார்தனன் என்பவருக்கும், முன்விரோதம் இருந்துள்ளது.அவர், கூலிப்படையை ஏவி, ஸ்ரீதரை கொலை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து, தி.நகர், தெற்கு போக் சாலையைச் சேர்ந்த, ஜனார்தனன் கைது செய்யப்பட்டார். திருவான்மியூரைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் ராஜேஷ், செய்யூரைச் சேர்ந்த சிவகுமார், சுதாகர் உள்ளிட்டோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement