Advertisement

தரமற்ற பள்ளி கட்டடம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் 

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே, சமீபத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டடம், தரமற்ற முறையில் இருப்பதாக கூறி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை, மாந்தோப்பு பகுதியில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 250க்கும் அதிகமான மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.பள்ளியில், 2.5 கோடி ரூபாய் செலவில், சமீபத்தில், புதிய கட்டடம் கட்டப்பட்டது. அந்த கட்டடம், தரமற்ற முறையில், கட்டப்பட்டுள்ளதாக கூறி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள், நேற்று மதியம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:கட்டடத்தின் சுவர்களை, கையால் தட்டினாலே, ஆட்டம் காண்கிறது. சிமென்ட் பூச்சு உதிர்ந்து கொட்டுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இக்கட்டடத்தை, அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ram - Pollachi

    தரமில்லாத ஒப்பந்ததாரர் கட்டும் கட்டடத்தில் தரத்தை எதிர்பார்ப்பது முட்டாள் தனமானது.

Advertisement