Advertisement

கொலை வழக்கில் தொடர்புடைய பெண் வழக்கறிஞர் குறித்து, 'பகீர்'

அடையாறு: பெண் மோகத்தால், பணத்தை இழந்த நபரின் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான பெண் வழக்கறிஞர் குறித்து, போலீசார் திடுக்கிடும் தகவல் தெரிவித்தனர்.அடையாறு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ், 50; திருமணம் ஆகவில்லை. ஜூன், 21ம் தேதி, பரத்வாஜ் மாயமானார். கைதுஅடையாறு போலீசார் விசாரணையில், பெண் மோகம் தொடர்பான பிரச்னையில், ஒரு பெண் வழக்கறிஞர், 65 லட்சம் ரூபாய் பறித்ததுடன், கூலிப்படை வாயிலாக, பரத்வாஜை கொலை செய்து, நடுக்கடலில் உடலை வீசியது தெரியவந்தது.கூலிப்படையைச் சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, அடையாறைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர், பிரீத்தி, 45, என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர்.போலீசார் கூறியதாவது:பரத்வாஜிக்கு, வாடகை மூலம், மாதம் பல லட்சம் ரூபாய், வருமானம் கிடைக்கிறது. வெளிநாட்டில் வசிக்கும் சகோதரரும், பல வகைகளில், அவருக்கு உதவி செய்து வந்துள்ளார்.மோகம்பரத்வாஜிக்கு, பணத்திற்கு பஞ்சமில்லை. மது, புகை அருந்தும் பழக்கம் இல்லாத அவர், பெண்கள் மீது மோகம் கொண்டுள்ளார். இது தான், அவரை பலி வாங்கிவிட்டது.கொலை குற்றவாளி பிரீத்தி, கணவனை பிரிந்து வாழ்கிறார். இரண்டாவதாக, வேறு ஒரு நபருடன் குடும்பம் நடத்தி, அவரும் பிரிந்து சென்றுள்ளார். நீதிமன்றம் செல்வதில்லை. வழக்கறிஞர் தொழிலை வைத்து, கட்டப்பஞ்சாயத்து செய்வது தான், இவரது வழக்கம்.பெற்றோர் மற்றும் சகோதரர்கள் மீதும், சொத்து வழக்கு தொடுத்து, தொல்லை கொடுத்து உள்ளார். பிரீத்திக்கு, ஒரு ஆண் வழக்கறிஞர், அடைக்கலம் கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.நாங்கள் அவரை நெருங்கும்போது, வேறு இடத்திற்கு மாறிவிடுகிறார். ஓரிரு நாளில், பிரீத்தியை கைது செய்வோம்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ram - Pollachi

    போஸ்கே சட்டத்தின் கீழ் இந்த பெண்ணை கைது செய்ய முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது விளக்கவும்.நன்றி!

Advertisement