Advertisement

தன்னார்வலர்களால் வேங்கைவாசல் ஏரி, 'பளீச்': குப்பையில் மறைந்திருந்த கிணறு கண்டுபிடிப்பு

சென்னை: நம் நாளிதழ் அளித்த ஊக்கத்தால், தாம்பரம் அருகே உள்ள, ராஜகீழ்ப்பாக்கம் ஏரியை தொடர்ந்து, வேங்கைவாசல் ஏரியை, நலச்சங்கத்தினர், தன்னார்வலர்கள், 400 பேர் இணைந்து, நேற்று சுத்தப்படுத்தினர்.
அப்போது, குப்பைக்குள் மறைந்திருந்த கிணறு ஒன்றை, தன்னார்வலர்கள் கண்டுபிடித்தனர்.ஏரி, குளங்களை சீரமைக்க, 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என, நலச்சங்கங்கள், தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்து, நம் நாளிதழ், தொடர்ந்து, விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது.இதன் எதிரொலியாக, பல்வேறு இடங்களில், நீர்நிலைகளை சீரமைக்க, நலச்சங்கத்தினர், பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சென்னை புறநகரில், சிட்லப்பாக்கம், சேலையூர், ராஜகீழ்ப்பாக்கம் ஏரிகளை தொடர்ந்து, முறையான அனுமதி பெற்று, செம்பாக்கத்தை அடுத்த வேங்கைவாசல் ஏரியை சுத்தப்படுத்த, ராஜகீழ்ப்பாக்கம் மற்றும் மாடம்பாக்கம் நலச்சங்கத்தினர் திட்டமிட்டனர்.நலச்சங்கங்களின் சார்பில், ஏரி சீரமைப்பு பணியில் ஈடுபட, தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை, ஏரியை சுத்தப்படுத்தும் பணிக்கு, 400 பேர் திரண்டனர்.காலை, 6:00 மணி முதல், 9:00 மணிவரை, ஏரியை சுத்தப்படும் பணி நடந்தது. நலச்சங்கத்தினருக்கு, மாடம்பாக்கம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 50 துப்புரவு ஊழியர்கள், ஜே.சி.பி., இயந்திரம் ஆகியவை வழங்கி, உதவி செய்யப்பட்டது.இது குறித்து, ராஜகீழ்ப்பாக்கம் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு செயலர், வி.சீதாரமான், 64, கூறியதாவது:ராஜகீழ்ப்பாக்கம் ஏரியை போன்று, வேங்கைவாசல் ஏரியையும் சுத்தப்படுத்தும் பணிக்கு, ஏராளமான பொதுமக்கள், ஆர்வமுடன் வந்திருந்தனர்.
தற்போது, ஏரியில் உள்ள குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி உள்ளோம். இப்பணிக்கு, மாடம்பாக்கம் பேரூராட்சி நிர்வாகம், உதவி செய்தது.'கிணறு வெட்ட பூதம் கிளம்பும்' என்ற, பழமொழிக்கு ஏற்ப, வேங்கைவாசல் ஏரியில், குப்பையை அள்ளியபோது, அதற்குள் மறைந்திருந்த கிணறு ஒன்றை கண்டுபிடித்துள்ளோம்.இது, எங்களை, மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது. அந்த கிணற்றையும் துார் வார திட்டமிட்டுள்ளோம். அடுத்த கட்டமாக, 22ம் தேதி, ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில், துார் வாரும் பணி துவங்க உள்ளது.இந்த பணியை, 15 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
அதன்பின், வேங்கைவாசல் ஏரியில், துார் வாரும் பணி துவங்கும். எங்கள் முயற்சிக்கு, தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும், 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.இவ்வாறு, அவர் கூறினார்.துாய்மையானதுசெம்பாக்கம் ஏரி!தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்த, சிட்லப்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்கள் திட்டமிட்டனர். நேற்று காலை, 7:00 மணிக்கு, ஆண்கள், பெண்கள் என, 100 பேர், ஏரியில் திரண்டனர். ஏரியை சுத்தப்படும் பணி துவங்கியது.காலை, 9:00 மணி வரை நடந்த சுத்தப்படுத்தும் பணியில், 50 மூட்டை குப்பை அகற்றப்பட்டது.
இது குறித்து, சிட்லப்பாக்கம் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர், பி.விஸ்வநாதன், 62, கூறியதாவது:செம்பாக்கம் ஏரியை காப்பாற்ற, பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஏரி குறித்து, 'தினமலர்' நாளிதழ், தொடர்ந்து செய்தி வெளியிட்டு, ஊக்கப்படுத்தி வருகிறது.'நேச்சர் கன்சர்வன்சி ஆப் இந்தியா, கேர் எர்த் இந்தியா டிரஸ்ட்' ஆகிய அமைப்புகள் இணைந்து, ஏரியை துார் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இப்பணிக்கு, ஐ.ஐ.டி., உதவி செய்து வருகிறது.ஏரியை சுத்தப்படுத்துவது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, கடந்த வாரம், சமுதாய நடை பயணம் மேற்கொண்டோம்.இந்த வாரம், ஏரி சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும், துாய்மை பணி நடைபெறும். செம்பாக்கம் ஏரியில், கழிவுநீர் விடுவதை, செம்பாக்கம், பல்லாவரம், சிட்லப்பாக்கம் ஆகிய உள்ளாட்சிகள் நிறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

    இது போல சுத்தமா இருக்க தான் மோடி ஸ்வச் பாரத் கொண்டு வந்தாரு. அத என்ன கிண்டல் செஞ்சாங்க. இப்ப என்ன நடக்குது.

Advertisement