Advertisement

அமலாக்கத் துறைக்கு எதிரான மனு திரும்ப பெற்றார் ராபர்ட் வாத்ரா

புதுடில்லி, : 'என் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது' என,அமலாக்கத் துறைக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை, தொழிலதிபரும், காங்., மூத்த தலைவர் சோனியாவின் மருமகனுமான, ராபர்ட் வாத்ரா, திரும்பப் பெற்றார்.பண மோசடிசெய்து வெளிநாட்டில் சொத்து வாங்கியதாக, காங்., பொதுச் செயலர், பிரியங்காவின் கணவரான, ராபர்ட் வாத்ரா மீது, அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்து உள்ளது.
இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரியும், தன் மீது கைது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிடக் கோரியும், ராபர்ட் வாத்ரா, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஇருந்தார்.இந்நிலையில், இந்த வழக்கை திரும்பப் பெறுவதாகக் கூறி, புதிய மனுவை அவர் தாக்கல் செய்தார். 'இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம், 'ஜாமின்' அளித்துள்ளது. அதனால், இந்த மனுவை திரும்பப் பெறுகிறேன்' என, வாத்ரா கூறியுள்ளார்.இதையடுத்து, இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக, டில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • பச்சையப்பன் -

  மக்கள் ஓட்டு போட்டு விட்டால் போதுமா! யாரை வேண்டுமானாலூம் கைது செய்யலாமா?. உயர் திரு ROBBER VADRA GANDHI மீது தவறு இருந்தால் உடனடியாக வழக்கு நடத்தி தண்டனை தர வேண்டியதுதானே. யார் தடுத்தார்கள்.? தராதரம் இல்லாமல் பேசுகின்றனர் இந்த நாராவாயன்கள். அவர் பெயரில் மட்டும் காந்தி யல்ல. அவர் வாழ்க்யிலும் காந்திதான். நினைவில் கொள்ளுங்கள் அவர் எங்கள் அன்பு சொக்கத் தங்கம் சோனியாவின் அன்பு மருமகன். இவரை இப்படி கேவலப்படுத்தினால் போப் மிகவும் வருத்தப்படுவார்.

 • DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

  இரண்டாவது முறை ஆட்சி அமைத்த பின்னர் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகியும் அரசு ஏன் இன்னும் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறதோ .. மக்களே முழு அங்கீகாரம் கொடுத்துவிட்டனர்.. இவர்கள் எல்லோரும் ஊழல்வாதிகள்,, இவர்கள் மீது நீங்கள் என்ன கடும் நடவடிக்கை எடுத்தாலும் நாங்கள் உங்கள் பக்கம் நிற்போம் என்கிற வகையில்.. அதன் பிறகும் அரசு மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டாமே.. இன்னும் ஒண்ணாம் நம்பர் ஆளையே உள்ள போடாம இழுத்துகிட்டு இருக்காங்க.. ரெண்டு மூணு நாலுஅஞ்சு னு பின்னாடி ஆயிரம் பேர் வரிசையா நிக்கறாங்க மோடி சார்..

 • southindian - chennai,இந்தியா

  பையன் பயந்து விட்டான்

 • sekar ng -

  இவர் வழக்கை திறமையாக கையாளுவதால் வாத்ராவை காங்கிரஸ் தலைவராக்கினால் பிரியாங்கா வம்ச வாரிசுகள் வளர நன்கு அமையும். பிரியங்கா குழந்தைகளை காங்கிரஸ் குழந்தை அணி தலைவராக்கலாம்

 • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

  ஒருவரை பற்றி தினமலர் சரியாக போடவேண்டும்.....சோனியாவின் மறுமகனும்,ராகுல் மச்சினனும், பிரியங்கா கணவரும்,ஊழல்வழக்குகளில் ஜாமீனில் உள்ளவரும், நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகிய ஆயுத புரோக்கருமான ராபட் வதோரா என போட வேண்டும்.....என்ன சரியா...

Advertisement