Advertisement

சிறுமி பலாத்காரம், கொலை : கொடூரனுக்கு ஆயுள்

கொல்லம், உறவுக்கார சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், கேரளாவைச் சேர்ந்த வாலிபருக்கு, மூன்று ஆயுள் தண்டனை மற்றும் 26 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துஉள்ளது.
இங்கே, கொல்லம் மாவட்டம் ஆஞ்சலைச் சேர்ந்த, ராஜேஷ், 25, தன் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த, 7 வயது சிறுமியை, 'டியூஷன்' வகுப்பில் விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், குளத்துபுழாவில் உள்ள, ரப்பர் தோட்டத்தில் வைத்து, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கொலை செய்து, சிறுமியின் உடலை ரப்பர் தோட்டத்தில் வீசியுள்ளார்.சிறுமியை காணாததால், பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. கடந்த, 2017 செப்டம்பரில் நடந்த இந்த சம்பவத்தில், வனப் பகுதியில் தலைமறைவாக இருந்த ராஜேஷ், கைது செய்யப்பட்டார்.

உறவுக்கார சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தது தொடர்பாக, ராஜேஷ் மீது, கொல்லத்தில் உள்ள, 'போக்சோ' எனப்படும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்ட சிறப்பு நீதி மன்றத்தில், வழக்கு நடந்து வந்தது.இந்த வழக்கில், ராஜேஷ் குற்றவாளி என, நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவருக்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது.ராஜேஷுக்கு மூன்று ஆயுள் தண்டனை மற்றும் 26 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு, 3.20 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement