Advertisement

பாலியல் பெண்களை உறவினருடன் அனுப்ப கோர்ட் மறுப்பு

மும்பை, மஹாராஷ்டிராவில், பாலியல் தொழிலில் ஈடுபட்டு கைதான இரண்டு பெண்களை, உறவினர்களுடன் அனுப்ப, மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவில் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, சங்கிலி மாவட்டத்தில், கடந்த பிப்ரவரியில், போலீசார் நடத்திய சோதனையில், பாலியல் தொழிலில் ஈடுபட்ட, 22 மற்றும் 25 வயதுடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை, சதாரா மாவட்ட பெண்கள் காப்பகத்தில் வைக்க, மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில், இரண்டு பெண்களின் உறவினர்கள், இரு வேறு மனுக்களை தாக்கல்செய்தனர்.அந்த மனுவில், காப்பகத்தில் உள்ள பெண்களில் ஒருவருக்கு குழந்தை உள்ளதாகவும், மற்றொருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதால், வேலை பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, இருவரையும் தங்களுடன் அனுப்புமாறு, உறவினர்கள் கோரி இருந்தனர்.இம்மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், இரு பெண்களையும், உறவினர்களுடன் அனுப்ப மறுத்து விட்டது.அவர்கள் மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் அபாயம் இருப்பதால், பாதுகாப்பு கருதி, அவர்களை வெளியில் அனுப்ப நீதிபதி மறுத்துவிட்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement