Advertisement

டவுட் தனபாலு

தி.மு.க., - எம்.எல்.ஏ., பூங்கோதை: தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்துகிறது. ஸ்டாலின் பொறுமையாக, ஒவ்வொன்றையும் எதிர்த்து வருகிறார். அவர் பொறுமை இழக்கும்போது, ஆடிக்காற்று வீசும். அப்போது, அம்மியும் பறக்கும்; அம்மா ஆட்சியும் பறக்கும்.


டவுட் தனபாலு: சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு, கவர்னரிடம் முறையீடு, இடைத்தேர்தல் என, அனைத்து வகையிலும், இந்த ஆட்சியை வீழ்த்த முயற்சி எடுத்தபடி தானே இருக்காரு... எதுவும் வேலைக்கு ஆகலை... இதன்பிறகும், 'ஏதோ பெரிய மனசு பண்ணி, விட்டு வெச்சிருக்காரு'ங்கற இந்த, 'பில்டப்' எல்லாம், எடுபடுறது, 'டவுட்' தான்...!பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர், நரேந்தர் சிங் தோமர்: தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்றே, மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், வழக்குகள் இருப்பதாக, மாநில அரசு காரணம் கூறுகிறது. உரிய காரணம் இல்லாமல், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்தால், மத்திய அரசு தன் நிதியை ரத்து செய்யும்.


டவுட் தனபாலு: வழக்குக்கும், இதற்கும் என்னங்க சம்பந்தம்... உச்ச நீதிமன்றமே, 'எப்பத்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவீங்க'ன்னு கேட்டு, கெடு விதிக்குது... ஆனால், மாநில தேர்தல் ஆணையம் தான், ஒவ்வொரு முறையும் அவகாசம் கேட்டுக்கிட்டு வருது... இந்த விஷயம் ஏதும் உங்களுக்குத் தெரியாதா... இல்லை, கூட்டணிக் கட்சி என்பதால், கொஞ்சம் வளைந்து நெளிந்து போறீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி: தரமான சாலை வசதி வேண்டுமானால், அதற்கு, சுங்க வரி செலுத்தித் தான் ஆக வேண்டும். சாலை திட்டங்களை நிறைவேற்ற, அரசிடம் போதிய நிதி இல்லை. எனவே, சுங்க வரி வசூலிப்பது தொடரும்.


டவுட் தனபாலு: தேர்தல் முடிந்த தைரியத்தில், இவ்வளவு அதிரடியா பேசுறீங்களோ... வாங்குற வரி எல்லாம் எங்கு போகுது... கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை, முழுமையாக பயனாளிகளுக்கு வழங்காமல், அரசு சேர்த்துக் கொள்வது ஏன்னு கேட்டால், 'தரமான சாலை வசதி செய்து தரத்தான்'னு, விளக்கம் கொடுத்தீங்களே... அதெல்லாம் என்னாச்சு... நாளைக்கு, குடிநீர், மருத்துவம், கல்வி என, அனைத்துக்கும் இதையே பதிலாகச் சொல்வீங்களோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    என்ன, இப்போது அதிகாரிகள் 'குவிப்பதை', நாளை கவுன்சிலர்கள் குவிக்கப்போகிறார்கள் இடம் தான் மாறும் உள்ளாட்சிக்கு மட்டுமென்ன, திடீரென்று உத்தம சிகாமணிகளா அவதாரம் செய்து வரப்போகிறார்கள் நாளை எம் எல் ஏ, எம் பி கொள்ளைக்கு இன்றைய முன்னோட்டம், அவ்வளவுதானே

  • LAX - Trichy,இந்தியா

    யம்மா பூங்கோத சட்டசபைல பெஞ்சு தட்றதோட நிறுத்திடாம, வாங்குற காசுக்கு அப்பப்போ இப்டி எதுனா கூவிக்கினே இரு..

  • sivakumar - Qin Huang Dao,சீனா

    உள்ளாட்சி தேர்தல் நடந்து என்ன பயன் "மாக்களுக்கு" கிடைக்க போகிறது . வழக்கம் போல் பணம் பொருள் வாங்கி கொண்டு வாக்களித்து ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி விடுவார்கள். குட்டி குட்டியாய் லோக்கல் மன்னர்கள், குண்டர்கள் அல்லது ஜமீன்தார்கள் உருவம் பெறுவார்கள். அவர்கள் வார்டுகளில் அரை கிலோ தங்க நகைகளை அணிந்து கொண்டு ஸ்கார்பியோ காரில் பவனி வரும்போது அதை பார்த்து கண்கள் விரிய பரவசம் அடைவார்கள். அப்பதான் புரியும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து கொள்ளி கட்டையால் முதுகை சொரிந்ததனால் கிடைக்கும் அற்புதமான சுகம் பற்றி.

Advertisement