dinamalar telegram
Advertisement

ஐ.சி.எப்., ஏரியை

Share
ஐ.சி.எப்., ஏரி வற்றாமல் இருக்க, ஏரியை துார் வார, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில், ரயில் பெட்டி ஒருங்கிணைப்பு தொழிற்சாலையான, ஐ.சி.எப்., வளாகத்தில், 100 ஆண்டுகள் பழமையான ஏரி உள்ளது.மொத்தம், 25 ஏக்கர் பரப்பில், 24 அடி ஆழம் கொண்ட இந்த ஏரி, ஐ.சி.எப்., மற்றும் சுற்றுப்புற மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது.நீர் வற்றாமல் இருக்க, ஏரிக்குள், ஏழு கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன், அருகில் உள்ள வில்லிவாக்கம் மற்றும் சுற்றுப்புறங்களில், மழை நீர் வடிகால்கள், முறையாக பராமரிக்கப்படாததால், கழிவுநீர் ஏரிக்குள் புகுந்தது.கழிவு நீர்மேலும், கட்டட இடிபாடுகள் மற்றும் குப்பைகளை பொதுமக்கள் கொட்டினர். இதனால், கழிவு நீர் ஏரியாக மாறி, ஏரி சீரழிந்து காணப்பட்டது.இதையடுத்து, 2016ல், ஐ.சி.எப்., பொது மேலாளராக இருந்த, மணி, 52 லட்சம் ரூபாய் செலவில், சுழற்சி முறையில், ஏரி நீரை, குழாய் வழியாக வெளியே எடுத்து, கழிவு நீரை வடிகட்டி, சுத்தப்படுத்தி, மீண்டும் ஏரியில் நிரப்பினார்.புதர்கள் அகற்றப்பட்டன. ஏரியில், மீன் குஞ்சுகள் விடப்பட்டன. ஏரி கரைகள் புதுப்பிக்கப்பட்டன. நாரைகள், கொக்குகள் உள்ளிட்ட பறவைகள், ஏரிக்கு இரை தேடி வந்து செல்கின்றன.தற்போது, நீர் வற்றியதால், ஏரியை ஆழப்படுத்த, ஐ.சி.எப்., நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, ஐ.சி.எப்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏரி நீர் வற்றியதால், மீண்டும் மாசடைய துவங்கியுள்ளது. இதனால், ஏரியை, 5 அடி ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மரக்கன்றுஏரியில், நீர்மட்டம் உயரும் போது, சுற்றுப்புறங்களில் உள்ள கிணறுகளில், நீர் மட்டம் மேம்படும். இப்பணியை, தனியார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனங்கள் உதவியுடன், செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஏரி கரைகளில், கூடுதலாக மரக்கன்றுகள் நடப்படும். பொதுமக்கள், ஏரியில் படகு சவாரி செய்ய ஏதுவாக, படகு போக்குவரத்து துவங்கவும் திட்டம் உள்ளது.இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
- நமது நிருபர் -
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement