கிடப்பில் ரோடு பணி பொதுமக்கள் அவதி
தேவதானப்பட்டி:நாகம்பட்டியில் இருந்து சில்வார்பட்டி தெற்கு காலனி வழியாக தார் ரோடு அமைக்க தேண்டப்பட்டு பணி இன்னும்துவங்கவில்லை. இதனால் நடந்து செல்வதற்கு சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாகம்பட்டியில் இருந்து சில்வார்பட்டி தெற்குகாலனி,சிறுகுளம் கண்மாய்க்கரை வழியாக ஜெயமங்கலம்-- தேவதானப்பட்டி ரோட்டில் சந்திப்பு ரோடு உள்ளது. இது சேதமடைந்திருந்தது. இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பாக இந்த ரோடு புதுப்பிக்க மண் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்டப்பட்டது. அதன் பிறகு பணிகள் துவங்க வில்லை. இதனால் இவ்வழியாக தோட்டங்களுக்குநடந்து செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை. எனவே இனியும் தாமதம் இன்றி ரோடு பணி துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!