Advertisement

மலையடிவார கீழ் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

பெரியகுளம்:பெரியகுளம் மலையடிவார கீழ் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரியகுளம் முருகமலை மலையடிகீழ் பகுதிகளில் மானாவாரி காடுகளில் சாகுபடி செய்யும் பயிர்களை, தோட்டங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன.
எண்டப்புளி, எ.புதுப்பட்டி, காமாட்சிபுரம், செம்மண்குழி, முருகமலை உட்பட பல பகுதிகளில் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை, எள், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களையும், லட்சுமிபுரம் மலையடிவாரம் கரும்பு பயிர்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துகிறது.விவசாயிகள் கூறுகையில், 'காட்டுப்பன்றிகளால் தொல்லையால் பயிர்கள் வீணாகிறது. வனத்துறையினர் காட்டுப்பன்றி கால் தடயங்களை சேகரித்து விரட்டுவதாக கூறி பல மாதங்கள் ஆகிவிட்டது. மாவட்ட வனத்துறை ஆய்வு செய்து, மலையடிவாரப்பகுதிகளில் சோலார்மின்வேலி அமைக்க வேண்டும்,' என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement