Advertisement

'டவுட்' தனபாலு

பா.ம.க., நிறுவனர், ராமதாஸ்: லோக்சபா தேர்தலில் கடுமையாக உழைத்தோம். ஆனால், முடிவுகள் எதிராக அமைந்தன. அந்த சோகத்திலும், பெரும் ஆறுதல், தமிழகம், தவறானவர்களின் கைகளுக்கு செல்லாமல், பா.ம.க., தடுத்தது.


டவுட் தனபாலு: தேர்தல் முடிவைத் தொடர்ந்து, அமைதி காத்தீங்க... ராஜ்யசபா, 'சீட்' கைக்கு வந்ததும், 'அ.தி.மு.க., ஆட்சி தப்பித்ததே, பா.ம.க.,வால் தான்'னு, பெருமை தேடுறீங்களே... இந்தப் போக்கு சரியா என்பது தான், என்னோட, 'டவுட்!'


தமிழக தொழில் துறை அமைச்சர், சம்பத்: தமிழகம் ஜவுளி, தோல் மற்றும் ரசாயன பொருட்கள் துறையில், முன்னணியில் உள்ளது. 12 துறைகளில், தொடர்ந்து முன்னணியில் உள்ளோம். தமிழகம் தான், தொழில் துவங்க உகந்த மாநிலம்.


டவுட் தனபாலு: 'ஹூண்டாய் கம்பெனியின், 'கியா' நிறுவனத்திடம், அமைச்சர், சம்பத், 17 சதவீதம் கமிஷன் கேட்டதால், அந்த நிறுவனம், ஆந்திராவுக்குச் சென்றது; 15 ஆயிரம் பேருக்கு கிடைக்க இருந்த வேலைவாய்ப்பு பறிபோனது'ன்னு, உங்க கட்சி, எம்.எல்.ஏ., கலைச்செல்வன் தொடர்ந்து கூறி வர்றாரே... இதை எப்படி, தொழில் துவங்க உகந்த மாநிலம்னு, எடுத்துக்கறது என்ற, 'டவுட்' வராதா...!


வனத்துறை அமைச்சர், சீனிவாசன்: திண்டுக்கல் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வெற்றி பெற்றாலும், சட்டசபை இடைத்தேர்தலில் தோற்றுள்ளது. அ.தி.மு.க., ஆட்சி நீடிக்க வேண்டும் என, மக்கள், இடைத்தேர்தலில் ஓட்டளித்துள்ளனர்.


டவுட் தனபாலு: 'இடைத்தேர்தல் நடந்தது எத்தனை தொகுதிகள்; அவற்றில், எத்தனை உங்க கட்சி வசம் இருந்தது; இப்போ, அவற்றில் எவ்வளவை மீட்டிருக்கீங்க... இது, பெரும்பாலான மக்களின் மனநிலை என்ன என்பதை உணர்த்தலையா'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க... வாயை வெச்சுக்கிட்டு கொஞ்சம் சும்மா இருங்க...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • hdjdj -

    Kia company Inga konduvanthu our cars vazillama panrathu nalla Nokkam,

Advertisement