LOGIN
dinamalar telegram
Advertisement

அத்திவரதரை காண 2 லட்சம் பேர் குவிந்தனர்

Share

சென்னை : அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் விழா என்பதால் அலை, அலையாக பக்தர்கள் காஞ்சியில் குவிகின்றனர்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் 48 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர், மீண்டும் தண்ணீருக்குள் பத்திரமாக வைப்பது வரதராஜ பெருமாள் கோவிலில்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

 • venkatesaperumal - sivakasi,இந்தியா

  நெடுதூரம் நின்றபடி காத்திருப்பு பக்தர்களை களைப்பும், மலைப்பும் ஏற்படுத்தும் இதற்கு மாற்றாக 500 நபருக்கு தரிசனம் வரை பின்னாடி வருபவர்களை ஆங்காங்காய் அமர்த்தி இளைப்பாற்றலாம் புண்ணியமா போகும்

 • Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ

  அப்படியே பொன்மணிக்கவேல் சிலை மீட்பு மற்றும் பாதுகாப்பு நிதி ஒன்றை ஆரம்பித்து மக்களிடம் நிதி திரட்டி பொன்மணிக்கவேலுக்கு நன்கொடையாக கொடுத்து உதவ வேண்டும். அத்திவரதர் சிலையையே கடத்த துணிந்தாலும் துணிவார்கள் இப்படியே விட்டால்.

 • Sriram - chennai,இந்தியா

  தினமலர்: நீங்க அத்திவாரதர் செய்தியை நல்ல பிரபலப்படுத்திருக்கீங்க... நல்லது... இன்று நான் தரிசனத்திற்கு சென்றேன், தனி ஒருவனாக சென்றேன், ஆனால் அத்திவரதரை காண இயலவில்லை, இது என் சொந்த காரணம் தான், தவிர வேற எந்த விஷயமும் இல்லை... ஆனால், அங்கே வரும் பக்தர்களுக்கு ஏற்படும் சில அவலங்களையும் அரசாங்கத்திற்கு காட்ட வேண்டும்.... சரியான கட்டமைப்பு இல்லாமல் இருக்கிறது... நீங்க காட்டுற படத்துல போனோமா வந்தோமான்னு காட்டிட்டு போயிடுறீங்க... மக்களும் அதை நம்பி அங்க வந்து குவியுறாங்க.. ஆண்கள், எப்படி வேணும்னாலும் சமாளித்து விடுவார்கள், உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல், வெயிலிலோ, மழையிலோ, பொறுமையாகவும், உடன் வரும் நண்பர்களுடன் அரட்டை அடித்தும் எப்படியாவது சென்று தரிசித்திடுவார்கள் ஆனால், பலர் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள்... இவர்களுக்கு சரியான குடி நீர் வசதியோ, உணவு வசதியோ இல்லை.. இதனை சாக்காக வைத்து அக்கம் பக்கம் உள்ள கடைகள் நல்ல பணம் பாக்கிறார்கள்... இது ஒரு புறம் இருக்க, சரியாக மக்களை வரிசை படுத்தி தரிசனம் செய்வதற்கு, கோவில் தேவஸ்தானமும், அறநிலை துறையும், காவல் துறையும் நல்ல ஏற்பாடு செய்ய வில்லை.. அங்கே, இன்று நான் காலை 7:30 வரிசையில் நின்றேன்... பின்னால் வந்தவர்கள் முன்னேற முன்னேற வரிசை 4 , 5 ஆக உயர்ந்தது...பார்த்தல் ஒரு பெரும் கும்பல் போல் காட்சி அளித்தது... பிறகு ஒரு 100 மீ செல்வதற்குள் 2 மணி நேரம் கடந்தது... பிறகு 3 மணி நேரம் கடந்த போது, வெறும் அறை கி.மீ மட்டுமே கடந்திருப்போம் ஒரு சந்து திரும்பி, மற்றோரு சந்துக்குள் செல்லும் முன் வேறு வழியில் இருக்கும் தெருவில் இருந்த இதே போன்ற கும்பல், அசைவற்றிருக்கும் கும்பலுடன் இணைகிறது...அங்கு சில ரகளைகளும் இதனால் ஏற்படுகிறது, சில இடங்களில் சிலர் மயங்கியும் விழுகின்றனர், அவர்களை பத்திரமாக கூட்டி செல்லவும் இயலவில்லை..., இதையெல்லாம் நீங்கள் பதிவிட்டிருந்தால், கை குழந்தைகள், முதியவர்கள் சற்று கவனத்துடன், உரிய நாட்களில் வந்து பொறுமையாக தரிசிக்கலாம்... இதையே, மற்ற மாநில கோவில்களை போல், ஒரு சரியான திட்டமிடலுடன் வழிமுறை ஏற்படுத்தினால் ஒரே வரிசை முறையில் கோவிலுக்குள் சென்றிருக்கலாம்... சற்று நேரம் ஆகும் ஆனாலும் கவலை இல்லை... இதையெல்லாம் மேற்கோள் காட்டி அரசாங்கத்திற்கு கொண்டு செல்லுங்கள்.... இனி வரும் நாட்களிலாவது பக்தர்கள் நிம்மதியாக அத்திவரதரை தரிசிப்பார்கள்... ஆகையினால், என் அனுபவத்தில் பக்தர்களுக்கு சொல்லகிறேன்... உடல் நலம் சரியில்லாதவர்கள், கை குழந்தைகள், பெண்கள் முடிந்தவரை online booking செய்து பார்க்கவும்... இளைஞர்கள், ஆண்கள் முடிந்தவரை தனியாகவோ, ஆண் நண்பர்களுடனோ online booking பண்ணாமல் தர்ம தரிசனம் முறையில் சென்று வாருங்கள்... வரிசையில் நிற்பவர்கள், மற்றவர்களை இடித்து முன்னேறாதீர்கள், முடிந்தவரை, வீண் கதைகளையோ, மற்றவர்களை திட்டியோ பேசாமல், "ராம, ராம", என்றோ, "வரதா, வரதா" என்றோ, இறை நாமத்தை சொல்லுங்கள், முடிந்தவரை பக்கத்தில் நிற்பவர்களுக்கு உதவுங்கள், இல்லாவிட்டாலும் பரவா இல்லை, அனால் அவர்களுக்கு தொந்திரவு இல்லாமல் இருங்கள் யாருக்கு தெரியும் அருகில் இருப்பவர் அந்த அத்திவாரதராகவும் இருக்கலாம் அல்லவா... எல்லாவற்றிக்கும் மேல், பெருமாள் நம்மை காண விரும்பினால் மட்டுமே, அவரை தரிசிக்க முடியும். ஓம் நமோ நாராயணாய....

 • rajan -

  இது ரொம்ப அதிகப்படியாக உள்ளது. ஒரு நாளைக்கு இவ்வளவு பேர்தான் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று ஒரு வரைமுறை கொண்டு வர வேண்டும். ஒரே நாளில் இரண்டு லட்சம் பேர் புகுந்தால் எல்லோருக்கும் சிரமம். நிர்வாகத்தினரும் மிகவும் சிரமப்படுகிறார்கள் எல்லோருக்கும் தண்ணீர் சாப்பாடு இன்று கிடைக்காமல் மூச்சுக்கூட விடமுடியாமல் நான்கு மணி நேரம் 5 மணி நேரம் வரிசையில் நின்று எல்லோரும் சக்தியை இழந்து சிரமப்படுகிறார்கள். கூட்ட நெரிசலில் சிக்கி ஏதாவது விபரீதம் ஆவதற்கு முன் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 48 நாட்கள் என்பதற்கு பதிலாக 100 நாட்கள் வரை நீட்டிக்க வேண்டும். இதில் பயனடைவர் அர்ச்சகர்கள் தான். ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் ஏற்கனவே அவர்களுடைய தொப்பை மட்டும் 15 கிலோ எடை இருக்கும் இப்போது அது அதிகரித்து 25 கிலோவாக ஆகி இருக்கும். அத்தி வரதரை வைத்து இவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். பெரும்பாலான மக்கள் பக்தியுடன் வருவதாகத் தெரியவில்லை அந்த சிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக பிக்னிக் மாதிரி வந்து போகிறார்கள்.

 • kulandhai Kannan -

  பல்லாண்டு கால கடவுள் மறுப்பு பொய்பிரசாரங்களையும், மதமாற்றப் பித்தலாட்டங்களையும் ஒரே வாரத்தில் புரட்டிப் போட்டுவிட்டார் அத்தி வரதர்.

Advertisement