LOGIN
dinamalar telegram
Advertisement

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை இடமாற்றம்

Share
மொடக்குறிச்சி: மத பாடலை பாடவைத்த விவகாரத்தில், பள்ளி ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டார். கொடுமுடி, கொல்லங்கோவில், தாண்டாம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 79 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நான்காம் வகுப்பு ஆசிரியையாக ஜோஸ்லின் கிரேஷ், 48, பணிபுரிகிறார். கிறிஸ்தவ மத பாடலை சொல்லி கொடுப்பதாகவும், வகுப்பு மாணவர்களுக்கு மதம் சம்பந்தமான புத்தகம் கொடுத்து, பிரார்த்தனையில் ஈடுபடுத்துவதாகவும், பெற்றோர் தரப்பில் புகார் எழுந்தது. இதுகுறித்து தலைமையாசிரியை செந்தமிழ் செல்வியிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாசூர் அருகேயுள்ள, பாம்பகவுண்டன்பாளையம் துவக்கப்பள்ளிக்கு, ஜோஸ்லின் கிரேஷ், நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் பிறப்பித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement