Advertisement

பாகிஸ்தானில் ரயில் விபத்து 16 பேர் பலி

லாகூர்:அண்டை நாடான, பாகிஸ்தானின் லாகூரில் இருந்து, குவெட்டாவை நோக்கி, அக்பர் எக்ஸ்பிரஸ் என்ற பயணியர் ரயில் சென்று கொண்டுஇருந்தது. சாதிக்காபாத் என்ற இடத்தில் உள்ள வால்ஹார் ரயில் நிலையம் அருகே வந்தபோது, தவறான பாதையில் இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது, பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில், 16 பேர் பலியாகினர்; 80க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, 15 லட்சம் ரூபாய், இழப்பீடு வழங்க, பாக்., அரசு உத்தரவிட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement