Advertisement

ஏரியை தூர்வாரும் இளைஞர்களுக்கு நிதி வழங்கி கலெக்டர் ஊக்கம்

தஞ்சாவூர்: தன் சொந்த ஊரில் உள்ள ஏரியில், துார்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், கடலுார் கலெக்டர், 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

கடலுார் கலெக்டர், அன்புச்செல்வன், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள, நாடியம் கிராமத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊரில் நடந்த விழாவில் பங்கேற்க, அவர், நேற்று வந்தார். தன் ஊரில் உள்ள, 550 ஏக்கர் பரப்பளவு உடைய பெரிய ஏரியை, கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில், இளைஞர்கள் இணைந்து துார்வாருவதை கேள்விப்பட்டு, அங்கு சென்று, பணியை பார்வையிட்டார்.

துார்வாரும் பணிக்காக, தன் சார்பில், 25 ஆயிரம் ரூபாயை, கலெக்டர், அன்புச்செல்வன், இளைஞர்களிடம் வழங்கி, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது, அவர் பேசியதாவது: இளைஞர்கள், தவறான வழியில் செல்லாமல், ஏரியை துார்வாரி, தண்ணீரை சேமிக்க வேண்டும் என, சமூக அக்கறையோடு செயல்படுவது பாராட்டத்தக்கது. இதில், அதிகம் கவனம் செலுத்தி, வெற்றி பெற வேண்டும். இளைஞர்களின் முயற்சி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Raju Katare - Chennai,இந்தியா

    பொது மக்களே எல்லாம் செய்வதென்றால் அரசுக்கும் அரசு ஊழியர்களுக்கும் என்ன பணி கொடுக்கலாம் ? வேலை எதுவும் செய்யாமல் சம்பளம் மட்டும் பெறுவார்களா ?

  • tamilan - கோயம்புத்தூர்,இந்தியா

    ஊழல்திமுக ஆட்டையை போட்ட ஏரியை யார் மீட்பது......

  • ESSEN - VA,யூ.எஸ்.ஏ

    பாராட்டுக்கு உரியது.ஒவ்வொரு கிராமத்திலும் அரசை எதிர் பாராமல் மக்கள் தண்ணீரை சேமிப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் .தண்ணீரையும் மாசு படாமல் காக்க வேண்டும். இங்கு (அமெரிக்காவில் எந்த மலை,நீர்ப்பரப்பு,பாலை,காடுகளில் ) ஒரு பிளாஸ்டிக் அல்லது பேப்பர் துண்டையோ பார்க்க முடியாது. நாமும் கற்று கொள்ளல் வேண்டும்.

    • Narayan - chennai,இந்தியா

      அமெரிக்கர்களுக்கு, நாடு ,தேச நேசம் எல்லாம் நம்மளை விட கொஞ்சம் அதிகம்

Advertisement