Advertisement

ரயிலில் இன்று சென்னைக்கு குடிநீர்

சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து, ரயில் மூலம், இன்று (ஜூலை 12)முதல், சென்னைக்கு குடிநீர் கொ ண்டு வரப்படுகிறது. சென்னையில், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, வேலூர் மாவட்டம் , ஜோலார்பேட்டையில் இருந்து, ரயில் மூலம், குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, ஜோலார்பேட்டை , வில்லிவாக்கம் ஆகிய இரு பகுதிகளிலும், குழாய் அமைக்கும் பணிகள் செய்யப்பட்டன. இதற்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, 50 கலன்களில், 25 லட்சம் லிட்டர் நீர், ரயில்களில் கொண்டு வரப்பட்டு, இன்று முதல், பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. தினசரி, நான்கு சுற்றுகள் அடிப்படையில், 1 கோடி லிட்டர் நீர் கொண்டு வரப்பட உள்ளது.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில், கலன்களில் நீர் நிரப்பப்பட்டு, ரயில் தயார் நிலையில் உள்ளது. அந்த ரயில், இன்று காலை புறப்பட்டு, பகல், 2:30 மணிக்கு, வில்லிவாக்கம் நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து, குழாய் வழியாக, கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரித்து வினியோகிக்கப்படும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • venugopal narayanan -

    train should be allowed to move non stop

  • vasumathi - Sindhathari Pettai ,இந்தியா

    சுத்திகரிக்க பட்ட கழிவு நீரை நிலத்தடியில் செலுத்தி மறு சுழற்சி செய்ய , மழை நீர் சேமிக்க என்று சென்னை மக்கள் நிறைய கற்று கொள்ள வேண்டும். சொந்த கிணறு இல்லாதவர்கள் கோவில் குளங்கள், கிணறுகளை தூர் வாரி, உங்களுக்கு உதவியாக்கி கொள்ளுங்கள்.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    ஆனால் ரயிலில் கக்கூஸில் தண்ணி இல்லை.. What an irony..

Advertisement