Advertisement

ஆறுகளின் குறுக்கே தடுப்பணை: எம்.எல்.ஏ., கோரிக்கை

சென்னை:'' திருவள்ளூர் மாவட்ட ஆறுகளின் குறுக்கே, 2 கி.மீ.,க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்,'' என, கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,விஜயகுமார் பேசினார்.
சட்டசபையில் அவர் பேசியதாவது:சென்னையின் குடிநீர் தேவைக்காக, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுகிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில், நிலத்தடி நீர்வளம் குறைந்து வருகிறது.மாவட்டத்தில் ஓடும், கொசஸ்தலையாறு, ஆரணியாறு குறுக்கே, 2 கி.மீ.,க்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். சென்னையில், வரும் காலங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும்.இவ்வாறு, விஜயகுமார் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement