Advertisement

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

சென்னை:தன்னுடன் வேலை பார்த்தவரை கொலை செய்த, வட மாநிலத்தவர் இருவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, சென்னை, 17வது அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை, கொளத்துாரில் உள்ள ஒரு ஓட்டலில், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த தங்கின்பா, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சிம்லங்தங் ஆகிய இருவரும், தங்கி வேலை பார்த்தனர்.தங்கின்பாவுக்கு, ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண்ணை, தான் தங்கி யிருந்த இடத்திற்கு, தங்கின்பா அடிக்கடி அழைத்து வந்துள்ளார்.இதை அறிந்த ஓட்டல் மேலாளர், தங்கின்பாவை, வேலையில் இருந்து நிறுத்தினார். இதற்கு, தன்னோடு வேலை பார்த்த சீவா, கீமா ஆகியோர் தான் காரணம் என நினைத்ததங்கின்பா, தன் நண்பர், சிம்லங்தங்கோடு சேர்ந்து, 2015ல், இருவரையும் கொலை வெறியோடு தாக்கினர். இதில், சீவா இறந்தார்.கொளத்துார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தங்கின்பா, சிம்லங்தங் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.வழக்கு விசாரணை, சென்னை, 17வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தஸ்னீம், இருவருக்கும், ஆயுள்தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பு வழங்கினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement