Advertisement

ரயிலில் இன்று குடிநீர் வருகிறது

சென்னை:ஜோலார்பேட்டையில் இருந்து, ரயில் மூலம், இன்று முதல், சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
சென்னையில், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து, ரயில் மூலம், குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, ஜோலார்பேட்டை, வில்லிவாக்கம் ஆகிய இரு பகுதிகளிலும், குழாய் அமைக்கும் பணிகள் செய்யப்பட்டன.இதற்காக, பிரத்யேக மாக வடிவமைக்கப்பட்ட, 50 கலன்களில், 25 லட்சம் லிட்டர் நீர், ரயில்களில் கொண்டு வரப்பட்டு, இன்று முதல், பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.தினசரி, நான்கு சுற்றுகள் அடிப்படையில், 1 கோடி லிட்டர் நீர் கொண்டு வரப்பட உள்ளது.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில், கலன்களில் நீர் நிரப்பப்பட்டு, ரயில் தயார் நிலையில் உள்ளது. அந்த ரயில், இன்று காலை புறப்பட்டு, பகல், 2:30 மணிக்கு, வில்லிவாக்கம் நிலையத்தை வந்தடையும்.அங்கிருந்து, குழாய் வழியாக, கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரித்து வினியோகிக்கப்படும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement