Advertisement

வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேர் ராஜ்யசபா எம்.பி.,க்களாக தேர்வாகினர்

சென்னை: தமிழகத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி.,க்களாக, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, பா.ம.க., இளைஞர் அணித் தலைவர், அன்புமணி உட்பட, ஆறு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ள, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ரத்தினவேல், மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா ஆகியோரின் பதவி காலம், 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. தி.மு.க.,வைச் சேர்ந்த கனிமொழி, லோக்சபா எம்.பி.,யானதும், ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். எனவே, புதிதாக, ஆறு எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்காக, வரும், 18ல் தேர்தல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

சட்டசபையில் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,விற்கு, தலா, மூன்று எம்.பி.,க்கள் கிடைக்கும்.அ.தி.மு.க., தனக்கான மூன்று இடங்களில் ஒன்றை, கூட்டணி கட்சியான, பா.ம.க.,விற்கு ஒதுக்கியது. தி.மு.க., தன் கூட்டணி கட்சியான, ம.தி.மு.க.,விற்கு, ஒன்றை ஒதுக்கியது. ராஜ்யசபா தேர்தலுக்கான மனு தாக்கல், 1ல் துவங்கி, 8ம் தேதி நிறைவடைந்தது.

அ.தி.மு.க., சார்பில், முகமது ஜான், சந்திரசேகரன்; பா.ம.க., சார்பில் அன்புமணி; தி.மு.க., சார்பில், சண்முகம், வில்சன், என்.ஆர்.இளங்கோ; ம.தி.மு.க., சார்பில் வைகோ ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்; இவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. என்.ஆர்.இளங்கோ, நேற்று முன்தினம், தன் மனுவை வாபஸ் பெற்றார். ஆறு இடங்களுக்கு, ஆறு பேர் மட்டுமே களத்தில் இருந்ததால், ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, தேர்தல் நடத்தும் அலுவலரான, சட்டசபை செயலர், சீனிவாசன், நேற்று மாலை அறிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படமாட்டேன் என கிறிஸ்து கோபாலசாமி எப்படி பதவியேற்பார்.......

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    சரித்திர நாயகன் ஜெயிலுக்கு போகவில்லையா? ...

  • nicolethomson - bengalooru,இந்தியா

    அட அதிமுக முஸ்லீம் பிரமுகருக்கு இடம் கொடுத்திருக்கு ஆனா திமுக ?

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தமிழ்நாட்டுக்கு பயனே இல்லாத டேனியல் ராஜாவுக்கு ஆப்பு கொடுத்த நல்லகாரியம் செய்த திமுகவுக்கு சபாஷ் ,கம்ம்யூனிஸ்ட்களை தமிழ்நாட்டை விட்டு ஏன் இந்தியாவை விட்டு ஒழிக்கணும் நேர்மையான கம்ம்யூனிஸ்ட் நல்லகண்ணு சங்கரய்யாவைத் தவிர இந்தியாவில் யாரும் கிடையாது இப்போ உள்ளவன் எல்லாம் சுகவாசிகள்

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    அப்பாடா, கட்சியை நல்ல விலைக்கு அடகு வைத்ததற்கு பலன் கிடைத்து விட்டது. இனி மத்திய அரசும், மாநில அரசும் கொண்டுவரும் எந்த அழிவு திட்டத்துக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் (சம்பந்தி நல்லா இருக்கணுமுன்னா, தமிழ்நாட்டை காவு கொடுத்தா தப்பேயில்லை).

Advertisement