Advertisement

சோக்சியின் சொத்து முடக்கம்

புதுடில்லி : பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,600 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி, மெஹுல் சோக்சி, மேற்கிந்திய தீவுகளின், ஆன்டிகுவா நாட்டுக்கு தப்பிச் சென்றார். இதில் நடந்துள்ள பண மோசடி குறித்து வழக்கு பதிவு செய்துள்ள, அமலாக்கத் துறை, சோக்சிக்கு சொந்தமாக, நம் நாட்டிலும், துபாயிலும் உள்ள, 24.77 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை, சோக்சிக்கு சொந்தமான, 2,534 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement