Advertisement

மீண்டும் தலைவர் பதவி; சோனியா மவுனம்

புதுடில்லி: காங். தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகியுள்ள நிலையில் சோனியா மீண்டும் தலைவராக வேண்டும் என அவரிடம் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் பதில் ஏதும் அளிக்காமல் சோனியா மவுனம் காத்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங். தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். புதியத் தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். உடல் நிலை காரணமாக 2017 டிசம்பரில் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகிய சோனியா தனது மகன் ராகுலை தலைவராக்கினார். தற்போது கட்சி பல பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என சோனியாவிடம் கட்சி மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.

தன்னை சந்தித்த மூத்த தலைவர்களிடம் எந்த பதிலையும் அளிக்காமல் சோனியா மவுனம் காத்துள்ளார். அதே நேரத்தில் தனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் 'தற்காலிகமாக கூட கட்சித் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க மாட்டேன்' என சோனியா கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் கட்சியின் மூத்த தலைவர்கள் சோர்ந்து போயுள்ளனர்.

லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கர்நாடகா கோவாவில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். பல மாநிலங்களில் கட்சியின் முக்கிய தலைவர்கள் ராகுலுக்கு ஆதரவாக தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். ராகுல் பிடிவாதமாக உள்ள நிலையில் சோனியாவும் தலைமையேற்க மறுத்துள்ளதால் அடுத்தது என்ன செய்வது என்பது தெரியாமல் கட்சியின் மூத்த தலைவர்கள் திணறி வருகின்றனர்.

பா.ஜ.வை குறைகூறக் கூடாது: பல மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில் காங்.கின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ராச்சித் சேத் விலகியுள்ளார். இது குறித்து சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கூறியுள்ளதாவது: ராகுல் ராஜினாமா செய்துள்ள நிலையில் எந்தப் பொறுப்பில் இருப்பதும் அர்த்தமற்றது. அவர் பதவி விலகி 45 நாட்களாகியும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. அதனால் ராஜினாமா செய்துள்ளேன். கர்நாடகா கோவாவில் கட்சிக்கு ஏற்பட்ட பிரச்னைக்ககு சந்தர்ப்பவாதிகளும் அதிகார புரோக்கர்களுமே காரணம். இதில் பா.ஜ.வை குறை கூறுவதில் எந்த லாபமும் இல்லை. பிரச்னை நம்மிடம்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • vinaikumar - Kansas city,யூ.எஸ்.ஏ

  சம்பளம் இல்லாத வேலை, ஓடி ஓடி உழைச்சி பலனை ராகுலுக்கு கொடுக்கணும், அப்படிப்பட்ட தலைவர் பதவி யாருக்கு வேணும்? சரி ஜெயிச்சதுக்கு தலை மேல வச்சி கொண்டாடுவாங்களா அதுவும் இல்ல , கண்டிப்பா எல்லா புகழும் ராஹுலுக்கே சேரும். microscope வச்சி தேடினாலும் அப்படிப்பட்ட ரப்பர் ஸ்டாம்ப் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  உண்மையில் இந்தியா தம்மை ஆளுகிறார்களா? சந்தேகம் தோன்றுகிறது.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  புள்ளையாண்டான் வாதத்துக்கு சப்போர்ட் பண்ணி, கட்சியினரிடம் அவன் ராசினாமாவை ஏற்கச் சொல்லவும் சங்கடம் ..... நீயே கன்டினியூ பண்ணு -ன்னு அவன் கிட்டே சொல்லவும் சங்கடம் .....

 • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

  இதுவும் ஒரு கண் கட்டு வித்தயே வேற வேலையே இல்லையா அவங்களுக்கு இதுதான் முழுநேர வேலையே அப்பா சாமி என்ன நடிப்புடா

 • Rajan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  சூசைய தலீவருக்குங்கோ

Advertisement