பிடிவாதம்:
தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், முதல் முறையாக, காங்கிரஸ், எம்.பி., ராகுல், நேற்று பேசினார். அப்போது அவர், மத்திய அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார். அவர் பேசியதாவது: நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறிய அளவிலாவது நிவாரணம் அளிக்கும் வகையில், அவர்கள் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும்படி கேட்கின்றனர். மத்திய அரசு, இந்த விஷயத்தில் பிடிவாதமாக உள்ளது.
எதிரொலி:
லோக்சபா தேர்தலின்போது, விவசாயிகள் நலனுக்காக, பல திட்டங்களை, பா.ஜ., அறிவித்தது. பல வாக்குறுதிகளை, பிரதமர் மோடி அளித்தார். அந்த திட்டங்களையும், வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங் பேசியதவாது: இந்த நாட்டை, நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் தான், விவசாயிகளின் இந்த துயர நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகிறது. வரும், 2025க்குள், விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.
ராகுல், நேற்று பேசும்போது, கேரள மாநிலம் சார்ந்த பிரச்னைகளையே அதிகம் பேசினார். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், கேரள மாநிலம், வயநாடு தொகுதியில், அவர் வெற்றி பெற்றார். இதன் எதிரொலியாகவே, கேரள பிரச்னைகளுக்கு, ராகுல், முக்கியத்துவம் கொடுத்தார்.
'ரயில்வேயை தனியார் மயமாக்குவதா?' லோக்சபாவில் நேற்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது: விமான போக்குவரத்து துறை அமைச்சர், விமான துறையை, தனியார் மயமாக்க விரும்புகிறார். ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே துறைக்கு சொந்தமான சொத்துகளை, தனியாரிடம் விற்க விரும்புகிறார். இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நாள், இந்த நாட்டையே விற்பனை செய்து விடுவார். ரயில்வே செலவினங்கள் தொடர்பாக, முந்தைய ரயில்வே அமைச்சர் பிரபு, ஒரு தொகையை குறிப்பிட்டார். இப்போதைய பட்ஜெட்டில், மிக அதிகமான ஒரு தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ரயில்வேக்கு சொந்தமான சொத்துகளை, மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விற்க முயற்சிக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
தொழில் அதிபர்களின் கடனை தள்ளிப்படி செய்தால் கட்சிக்கும் , மந்திரிகளுக்கு கமிஷன் கிடைக்கும் . விவசாயிக்கு தள்ளுபடி செய்தால் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது. இது தான் நேர்மையான மத்திய அரசு. 56இன்ச் மார்புள்ள நேர்மையான அரசு.