Advertisement

நியூஸ்பிரின்ட் மீது சுங்க வரி; வாபஸ் பெற வலியுறுத்தல்

புதுடில்லி: ''நியூஸ்பிரின்ட் எனப்படும், செய்தித்தாள் அச்சிட பயன்படும் தாள் மீது, மத்திய அரசு புதிதாக விதித்துள்ள, 10 சதவீத சுங்க வரியை உடனடியாக விலக்க வேண்டும்,'' என, ராஜ்யசபா, எம்.பி., வீரேந்திர குமார் வலியுறுத்தினார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக, ராஜ்யசபாவில் இன்று(ஜூலை 11) நடந்த விவாதத்தில், வீரேந்திரகுமார், எம்.பி., பேசியதாவது: கடந்த, 2009ம் ஆண்டிலிருந்து, நியூஸ் பிரின்ட் மீது, சுங்க வரி விதிக்கப்படாத நிலையில், இந்த பட்ஜெட்டில், 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், செய்தித்தாள் வெளியிடும் நிறுவனங்களுக்கு, பலத்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உற்பத்தியாகும் நியூஸ்பிரின்ட், உள்நாட்டு தேவைக்கு போதுமானதாக இல்லை. மேலும், இந்திய தயாரிப்பு நியூஸ் பிரின்ட்டை, அதிவேக அச்சிடும் இயந்திரங்களில் பயன்படுத்த முடிவதில்லை. எனவே, வெளிநாடுகளில் இருந்து தான், இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.நியூஸ்பிரின்ட் தயாரிப்பிற்காக, மரங்கள் வெட்டப்படுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனவும், தெரிவிக்கப்படுகிறது. இதனால், சீனாவில், பல நியூஸ்பிரின்ட் தயாரிப்பு ஆலைகள், மூடப்பட்டுவிட்டன.

இந்நிலையில், இறக்குமதியாகும் நியூஸ்பிரின்ட் மீது, சுங்க வரி விதித்திருப்பது, செய்தித்தாள் வெளியிடும் நிறுவனங்களுக்கு, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அறிவிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை, மத்திய அரசு, உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு, வீரேந்திர குமார் எம்.பி., பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • Nimirthu Nill - Coimbatore,இந்தியா

  Why only 10% impose 25% .. They are getting revenue over advertisement as well.. Rule should be applicable for all.

 • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

  தயவு செய்து நியூஸ் பிரிண்ட் மீது வரியை குறைக்க வேண்டாம் . முடிந்த வரையில் அதிகப்படுத்தவும் . வரி அதிகமானால் தினசரியின் விலையை அதிகப்படுத்தி அதை சரி செய்ய போகிறார்கள் . அதனால் தினசரிக்கு எந்த பாதிப்பும் இல்லை . மற்றபடி இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

 • Raj - costanoa,யூ.எஸ்.ஏ

  நாட்டுலே அவனவன் குடிக்க தண்ணியில்லாம, காசுக்கு வாங்கி குடிச்சு தவிச்சுட்டு இருக்கான். விளம்பரம் செய்ய நியூஸ்ப்ரின்ட் எதுக்கு வரியில்லாம குடுக்கணும். நம்ம சரவணா ஸ்டோர்ஸ், கல்யாண் தங்க நகை கடை, மோடி பிஜேபி, காங்கிரஸ், அ தி மு க சாதனை விளம்பரம் எல்லாம் செய்வதற்கு கொஞ்சம் காசு அதிகமா குடுத்தா என்ன கொறஞ்சா போயிடுவாங்க ? நாளிதழ்கள் விலை அதிகரித்தல் நல்லது தான். மக்கள் இந்த நியூஸ்பிரிண்ட்டினால் சுற்று சூழல் பாதிப்பு குறித்து அறிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு காகிதமும் மக்கள் படித்த பின்பு கழிவுகளை சேகரித்து மறு சுழற்சி செய்ய அரசாங்கம் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும். இதையெல்லாம் மனதில் கொண்டு தான் வரி விதிக்கப்படுகிறது.

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  'நியூஸ்பிரின்ட்' மீது சுங்க வரி வாபஸ் பெறவேண்டும் என்றும் கூறும் இவர் - நேரடியாக கூறவேண்டுமென்றால், பத்திரிகை முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் இவர், தைரியமிருந்தால் அந்த பத்திரிகை முதலாளிகளிடம் (முதலைகளிடம்) 2010 -ஆம் ஆண்டில் பத்திரிகை தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட wage board recommendations களை அமுல் படுத்தவேண்டும் கூறினால் எவ்வளவு புண்ணியமாப்போகும். 2010 -இல் அமுல்படுத்தப்படவேண்டிய அந்த wage board recommendations -களை ஐந்தும் சில புத்திரிகள் முதலாளிகள் அமுல் படுத்தாமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம். இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், நாட்டின் உச்சநீதிமன்றமே அதை அமுல் படுத்தவேண்டும் என்று ஆர்டர் செய்தும் இந்த பணம் கொழுத்த பத்திரிகை முதலாளிகள் அமுல் படுத்தாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம். அது நாட்டின் உச்ச நீதிமன்றத்தை இழிவு படுத்துவது ஆகாதா...???

 • Suri - Chennai,இந்தியா

  உங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. நீங்களும் தேச வளர்ச்சியில் வரி கட்டி பங்கு பெருங்களேன்?? சுங்க வரி என்ன பீ ஜெ பீ வீட்டுக்கு எடுத்து செல்கிறது?? நாட்டு மக்களுக்கு .. நாட்டின் வளர்ச்சிக்கு தானே செலவிடுகிறார்கள்.... நாட்டு வளர்ச்சியில் பத்திரிக்கைகளுக்கு பங்கு பெற விருப்பம் இல்லையா? மற்ற பொருட்கள் மீது சுங்க வரி வித்தபோது.. இப்படி கூக்குரல் எழுபவத்திலேயே.. பத்திரிக்கைகள்?? ஏன் மோடி அரசின் விளம்பரங்கள் போதவில்லையா.. பத்திரிக்கை நடத்துவதற்கு??

Advertisement