Advertisement

நாட்டை மதிப்பவன்; விரைந்து நடவடிக்கை எடுக்க முடியாது: கர்நாடக சபாநாயகர்

பெங்களூரு: கர்நாடகாவில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் 10 பேரின் ராஜினாமா விவகாரத்தில், அவசரப்பட்டு முடிவு எடுக்காமல், முறைப்படி ஆராய்ந்து சட்டப்படி முடிவு எடுக்கப்படும் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, கர்நாடகாவில், 10 காங்., எம்.எல்.ஏ.,க்கள் கர்நாடக சபாநாயகர் முன் நேரில் ஆஜராகி ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அதற்குபின் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் ரமேஷ் குமார் கூறியதாவது:
ராஜினாமா கடிதம் கொடுத்த 11 பேரில் 8 பேரின் ராஜினாமா முறையாக அளிக்கப்படவில்லை. அவர்களிடம் நேரில் முறையாக ராஜினாமா கொடுக்கும்படி கேட்டேன். கடந்த 6ம் தேதி எம்.எல்.ஏ.,க்கள் செய்ய வருவது குறித்து எனக்கு தகவல் இல்லை. அன்றைய தினம் நான் வெளியில் வேறு வேலையாக இருந்தேன். மேலும் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன.

தற்போது நடைபெறும் சம்பவங்கள் என் மனதை வேதனைப்படுத்துகின்றன. மக்களுக்கு மட்டுமே பதில் அளிக்க நான் கடமைப்பட்டவன். சபாநாயகராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் எந்த எம்.எல்.ஏ.,வையும் நீக்குவதோ, காப்பாற்றுவது என் வேலை அல்ல.

ராஜினாமா குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி சிலருக்கு முறையாக சந்தர்ப்பம் வழங்கினேன். ஆனால் அவர்கள் அதை ஏற்காமல் நீதிமன்றம் சென்றனர். ராஜினாமா கடிதம் மீது மின்னல் வேகத்தில் என்னால் முடிவு எடுக்க முடியாது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது; சட்டப்படியே முடிவு எடுக்கப்படும். இந்த நாட்டையும், அரசியலமைப்பையும் மதித்து போற்றுபவன் எனவே உடனடியாக முடிவு எடுக்க முடியாது. இந்த ராஜினாமா, அரசியல் சூழ்ச்சியா அல்லது தாமாக முடிவெடுத்ததா என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்ய மாட்டேன். ஜனநாயக முறைப்படி செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (18)

  • Dinesh Pandian - Hyderabad,இந்தியா

    புதிய தத்துவம் 10302. இந்த ஆய்வக வேலையெல்லாம் மாணவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்க ராஜினாமாவை ஏற்கவும் இல்லையென்றால் சட்டசபையை முடக்க வழி செய்யுங்கள்

  • தமிழன் -

    இவர் நாட்டை மதிப்பவ4 என்றால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ன நாட்டை மதிகாதவர்களா ??? வேண்டுமென்றே காலதாமதம் செய்யும் இவரை நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த தவறிய குற்றத்துக்காக சிறையில் அடைக்க வேண்டும்

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    'நோட்டை' என்றுதான் கூற நினைத்தார். ஒரு கொம்பு விட்டுப்போய் 'நாட்டை' என்று ஆகி விட்டது.

  • venugopal narayanan -

    it is mockery on democracy...every body is playing...very flexible and conviniently liberal attitude

  • nicolethomson - bengalooru,இந்தியா

    இப்படியா ஆராய்ந்து டாக்டரேட் பண்ணுவீங்க ,

Advertisement