Advertisement

தேனியில் நியூட்ரினோ மையம்; நீங்கியது ஐயம்

புதுடில்லி: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பொட்டிபுரம் கிராமம் அருகே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்து, நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டது.
இந்த திட்டத்துக்காக, மலை அடியில், 2.5 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை தோண்ட திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதை தொடர்ந்து, தமிழக அரசும் ஒப்புதல் தந்துள்ளது. இதையடுத்து, 2015ல், இத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், தேனி மாவட்டம் பொட்டி புரத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்பதல் அளித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக, அங்கு நியூட்ரினோ மையம் அமைய உள்ளது. 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது. நியூட்ரினோ ஆயவகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; எந்த கதிர்வீச்சு அபாயமும் ஏற்படாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நியூட்ரினோ:நியூட்ரினோ என்பது, மின்னியல் ரீதியில், நேர்மறை, எதிர்மறை இன்றி, நடுத்தன்மை உடைய நுண்துகள். எலக்ட்ரானை ஒப்பிடுகையில், இதன் அடர்த்தி, மிகக் குறைவு. கதிரியக்க தாக்கத்தால், நியூட்ரினோ உருவாகிறது. நியூட்ரினோ ஆராய்ச்சி மூலம், புவியின் உள்கட்டமைப்பை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (37)

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  எங்களோட வேலை.. மணல் கொள்ளை , ஏரியை வளச்சு பிளாட் போடுறது , லஞ்சம் வாங்கிறது , கல்வியை வித்து யாவாரம் பண்றது, திருட்டு கேபிள் கனெக்ஷன் கொடுக்கிறது, சிம் கார்டுல கோடிக்கணக்கில் காசு பாக்கிறது, நல்லா துட்டு அடிக்கிற திட்டம் ஆரம்பிக்கிறது , அரசு ஊழியர்களுக்கு தேவை இல்லாத சலுகைகள் குடுத்து கூட்டு கொள்ளை அடிப்பது ....இப்படி .. நமக்கு தெரிந்ததெல்லாம் ஓசி டிவி, மானாட மயிலாட , துட்டு அடிக்கிறதுக்கு ஓட்டு, ஓட்டுக்கு துட்டு , டாஸ் மாக் , குவார்ட்டர், கோழி பிரியாணி , துணைவிக்கு இணைவிகள், தாலி அறுப்பது, ஓசி கேக், ஓசி பிரியாணி, மக்களை ஏமாற்றுவது, அப்பாவி எவனாவது கிடைத்தால் வசை பாடுவது........... மத்திய அரசு மக்கள் நலத்துக்காக கொண்டு வர்ற நதி நீர் இணைப்பு, எட்டு வழி சாலை கல்வியை மேம்படுத்தும் நவோதயா, நீட்., பொருளாதார,அறிவியல் திட்டங்கள் இதெல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது. நியூட்ரினோ ன்னா சாக்கலேட்டுன்னு நினைக்கிட்டு இருந்தோம், . என்னா.. அது மத்திய அரசு திட்டமா? அப்போ மோடி ஒழிக, பெரியார் வாழ்க

 • venugopal narayanan -

  so..we look forward to one more agitation by Tamil Nadu savers Time pass...

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  நிறைய விஞ்ஞானிகள் இங்கே கருத்து எழுதியிருக்கிறார்கள் ...... ஆழமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள் ...... இந்திய அரசு இவர்களைப் பயன்படுத்தத் தவறி விட்டது என்பதே என்னுடைய வேதனை ......

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  சரி, பூமி கட்டமைப்பை தெரிந்து என்ன செய்யப்போகிறார்கள்? ஏதேதோ காரணம் சொல்லி மலையை அழித்தொழிப்பதுதான் திட்டம். நடக்கட்டும்.

 • Maha - Herndon,யூ.எஸ்.ஏ

  அமெரிக்காவே அணுக்கழிவை அழிக்க திட்டங்கள் இல்லாமல் திணறுகிறது. ஒபாமா காலத்தில், 50 பில்லியன் டாலர் (கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய்), ஒதுக்கினார்கள். அனால், அறிவியல் திட்டங்கள் இல்லாமல் திணறுகிறது. இந்திய போன்ற வளரும் நாடுகள், சும்மா அந்த அறிஞர் சொன்னார், இவர் சொன்னார், என்று அணு மற்றும் இயற்க்கைக்கு எதிரான திட்டங்களை போடுகின்றன. ஒரு கேள்வி. பூமியின் உட்பகுதியை அறியத்தான் இந்த ஆராய்ச்சி என்றல், நமக்கு இன்னும் பூமியின் உட்பகுதி தெரியவில்லை, பூகம்பம் எப்போது வரும் என்று கூட கணிக்க முடியவில்லை. பிறகெப்படி,இவர்கள் உறுதியாக, 2 kilometer பூமி கொடைவது ஆபத்தில்லை என்று கூறுகிறார்கள். ரஷ்யாவில், அணு உலை வெடித்தபோது, அணு உலை பாதுகாப்பானது என்று சொன்ன அறிஞர்கள், ஒளிந்து கொண்டார்கள். HBO Chennal, ரஷ்யா அணு உலை வெடிப்பின் கொடூரங்களை, குறித்து, Documentary ஒளி பரப்பி உள்ளது. சென்று பாருங்கள். எந்த PhD அல்லது Post-Doctarate சயின்டிஸ்ட் கூட பூகம்பம் பற்றி முன்னறிவிப்பு வெளியிட முடியாது.ஏன் என்றல், அது அவர்களுக்கு தெரியாது. இந்த ஆராய்ச்சியின் நோக்கமே, பூமியின் உல் குறித்து ஆய்வது குறித்து என்று கூறுகிறார்கள், என்றல், இவர்களுக்கு, எப்படி, 2 Kilometer கொடைவது, ஆபத்தில்லாது என்று எப்படி கூற முடியும், உறுதியாக ? இப்படித்தா, 20 ஆண்டுகளுக்கு மேலாக, தேங்காய் உடலுக்கு மிக கெடுதல் என்றும், உலக விஞானிகள் கூறினார்கள். இப்போது, திடுமென, தேங்காய், Super food கூறுகிறார்கள்...…(இன்னும் சில விஞானிகள் கருத்து வேறுபாடுகளில் உள்ளார்கள் என்பது இன்னும் சுவையான செய்தி)…. பல கோடி வருடங்களை நன்றாக இருந்த பூமி, அறிவியல்-வளர்ச்சி என்ற பெயரில், ஒரு சில நூறு ஆண்டுகளில், Plastic குப்பை கிடங்கை,பனி பாறைகள் உருகி, புகை மண்டலமே-சில பெரு நகரங்கள் சுவாச கவர் போட்டு சுவாசிக்கும் நிலை, உலகின் வெப்பம் உச்சத்தில் சென்று, இன்று நீர் இல்லாமல்- ரயிலிலும், லாரியிலும், நீருக்காக அலைகிறோம்…ஒரு விஞானி சொல்கிறார் என்றல், அவரிடம் கேளுங்கள், ஏன் சார், இவ்வளவு தொழில் நுட்பம் அடைந்து விட்டது என்று சொல்கிறீர்கள், அனால்,ஒரு சிறு பூகம்பம் கூட உங்களால் கணிக்க முடியவில்லை ?

Advertisement