Advertisement

கவலைப்படாதே ‛மாஜி: இருக்கு மோடியின் ஆசி

புதுடில்லி : தனது முந்தைய 5 ஆண்டு கால ஆட்சியின் போது அமைச்சரவையில் இடம் பெற்றவர்களை தொடர்ந்து மக்களுடன் தொடர்ப்பில் இருக்கும்படியும், அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் பயன்கள் அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறி உள்ளார்.2014 முதல் 2019 வரை தனது ஆட்சி காலத்தில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கு 2 நாட்களுக்கு முன் காலை விருந்தளித்து சந்தித்துள்ளார் மோடி. அப்போது அவர்களிடம், இப்போது அமைச்சர்களாக இல்லாததால் நீங்கள் விலகி இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.மக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து அரசுக்கு உதவ வேண்டும். மக்களின் எண்ணங்களை அரசு தெரிந்து கொள்வதற்கும் உதவ வேண்டும் என்று மோடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மக்களுடன் தொடர்பில் இருந்து, அரசின் செயல்பாடுகள் குறித்து பிரசாரம் செய்தும், மக்களின் கருத்துக்களை களத்திற்கே சென்று கண்டறிய வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர்களை மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், அனைத்து எம்.பி.,க்கள் குழுக்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளார். ஒவ்வொரு எம்.பி.,யுடனும் தொடர்பில் இருக்க பிரதமர் விரும்புகிறார். முதலில் அனைத்து எம்.பி.,க்களையும் அழைத்து விருந்தளித்த மோடி, தற்போது பா.ஜ., எம்.பி.,க்கள் குழுவை சந்தித்து, மந்தமான செயல்பாடு இருக்க கூடாது என உறுதிபட கூறி உள்ளார் என்றார்.
மோடியின் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 37 க்கும் அதிகமான அமைச்சர்கள், புதிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை.
ஏற்கனவே எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி வகுப்புகளை சேர்ந்த எம்.பி.,க்களை சந்தித்து விட்ட மோடி, இந்த வாரம் மற்றும் வரும் வாரங்களில் பெண் எம்.பி.,க்கள் மற்றும் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்களை சந்திக்க உள்ளார்.பா.ஜ.,வில் முதல் முறையாக எம்.பி.,யானவர்கள் 133 பேர். இவர்கள், 45 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என பிரிக்கப்பட்டு மோடியை சந்தித்து, கலந்துரையாட உள்ளனர்.
கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், எம்.பி.,க்கள் தொடர்ந்து துடிப்புடன் இருக்க வேண்டும் என மோடி நினைக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.,க்கள் யாரும் பின்னால் அமர வேண்டாம் என கூறி உள்ளார். மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேலில் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட உள்ள பாதயாத்திரையாக சென்று மரியாதை செலுத்துவது தொடர்பான யோசனைகளை எம்.பி.,க்கள் வழங்கவும் கேட்டுள்ளார்.
அதனை எப்படி முன்னெடுத்து செல்வது என்பதை கட்சியே முடிவு செய்ய உள்ளது. இந்த யாத்திரையில் எம்.பி.,க்கள் 150 கி.மீ.,க்கள் நடப்பது அல்லது 150 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து யாத்திரை செல்வது தொடர்பாகவும் கருத்துக்களை கூறலாம் என மோடி தெரிவித்துள்ளார் என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

  Oho ho...

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  . கவியரசு - கவிப்பேரரசு வைபவங்களை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  மக்களின் வரிப்பணத்தில் வாழ்நாள் பென்சன் கிடைக்கும்போது நீங்களாவது மற்றவர்களுக்கு விட்டுக்கொண்டுங்கள். நீங்கள் நன்றாக இருப்பீர்கள், வந்தே மாதரம்

 • ஆப்பு -

  கலைஞர் மாதிரி எல்லோருக்கும் இதயத்தில் இடம் குடுத்துட்டாரு...

 • Asagh busagh - Munich,ஜெர்மனி

  பிஜேபி என்னா குடும்ப கட்சியா இல்ல அடிமை கட்சியா பழைய மூஞ்சிகளையே மறுபடியும் அமைச்சர்களாக்க? கும்பலா சேர்ந்து காண்ட்ராக்ட், கமிஷன் வாங்கி களவாணி தனம் செய்யுறவனுங்களுக்கு ஒருத்தன ஒருத்தன் முட்டு கொடுக்கறது தவிர வேற வழியே இல்ல. சுடலை, இபிஎஸ் எல்லாம் இதையெல்லாம் கனவுல கூட செயலாக்க முடியாது. ஓசிவாயனுங்களோ அவனுங்க சொத்தையே ஆட்டைய போட்டு அதுல இந்த திருடனுங்க கிள்ளி எரிகிற எலும்ப கவ்விக்கிட்டு கோபேக் மோடின்னு கோஷம் மட்டும் போடுவானுங்க.

Advertisement