LOGIN
dinamalar telegram
Advertisement

கிறிஸ்தவ பாடலை பாட மாணவர்களுக்கு அழுத்தம்: பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு

Share
மொடக்குறிச்சி: கிறிஸ்தவ மத பாடல்களை பாட, மாணவர்களுக்கு அழுத்தம் தரப்பட்டதால், தாண்டாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை, பெற்றோர் நேற்று முற்றுகையிட்டனர்.


ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, கொல்லங்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட தாண்டாம்பாளையத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 79 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமையாசிரியையாக செந்தமிழ் செல்வி,51, நான்காம் வகுப்பு ஆசிரியையாக ஜோஸ்லின் கிரேஷ்,48, ஆகியோர் பணிபுரிகின்றனர். சில நாட்களாக, கிறிஸ்தவ மத பாடல்களை மாணவ, மாணவியரிடம் ஆசிரியை ஜோஸ்லின் கிரேஷ் புகுத்தி வந்தார். மேலும், அவர்களுக்கு கிறிஸ்தவ மதம் குறித்த புத்தகம் வழங்குவதும், பிரார்த்தனையில் ஈடுபடுத்துவதுமாக கட்டாயப்படுத்தினார். இது பற்றி, பெற்றோரிடம் மாணவ, மாணவியர் புகார் தெரிவித்தனர். தலைமையாசிரியை செந்தமிழ் செல்வியிடம் நேற்று முன்தினம் பெற்றோர் முறையிட்டனர். அதன் மீது நடவடிக்கை எடுக்காததால், நேற்று பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். ஒரு மணி நேரம் நீடித்த பேச்சு வார்த்தையில், அதிகாரிகளிடம் உடனே புகார் செய்து நடவடிக்கை எடுப்பதாக, அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரன் உறுதியளித்ததை தொடர்ந்து, பெற்றோர் கலைந்து சென்றனர். பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம், ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதனால் தாண்டாம்பாளையத்தில் பரபரப்பு நிலவியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement