dinamalar telegram
Advertisement

டியூஷன் சென்டரில் ஜெபக்கூட்டம் நடப்பதாக புகார்: இந்து முன்னணியினர் எதிர்ப்பு; போலீசார் சமரசம்

Share
ஈரோடு: டியூஷன் சென்டரில், ஜெபக்கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் குவிந்தனர். போலீசார் சமரசம் செய்தனர்.
ஈரோடு, மாணிக்கம்பாளையம் ரோடு, காந்தி நகரில், மேசியா அறக்கட்டளை டியூசன், டுட்டோரியல் சென்டர், இரு வாரங்களுக்கு முன் துவங்கியது. கடந்த ஞாயிற்றுகிழமை, சென்டரில் ஜெபக்கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, டியூஷன் சென்டர் பெயரில், ஜெபக்கூட்டம் நடப்பதாக, இந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் முரளி உள்ளிட்டோர், வீரப்பன் சத்திரம் போலீசில் புகாரளித்தனர். இதற்கிடையில் கட்டட உரிமையாளர் மோகன சுந்தரம், டியூஷன் சென்டருக்கு தான் வாடகைக்கு விடப்பட்டது. ஆனால், ஜெபக்கூட்டம் நடத்துகின்றனர். எனவே, இடத்தை காலி செய்து தர, வேண்டும் என்று, வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் தந்தார். நேற்று காலை, வழக்கம்போல் ஜெபக்கூட்டம் துவங்கியது. இதையறிந்த ஈரோடு மாநகர இந்து முன்னணியினர், 50 பேர், ஜெபக்கூடத்தை முற்றுகையிட சென்றனர். வீரப்பன்சத்திரம் போலீசாரும் விரைந்தனர். இருதரப்பினரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கு, இரு தரப்பினரிடம், தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய் துறை அதிகாரிகள், விரைவில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவர். அதுவரை இரு தரப்பினரும் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் நடந்து கொள்ள கூடாது என்று, எழுதி வாங்கி கொண்டு அனுப்பினர். இரு தரப்பினரும், ஸ்டேஷனில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெபக்கூட்டம் நடத்தியவர்களுக்கு ஆதரவாக, விடுதலை சிறுத்தைகள், சிறுபான்மை இன மக்களின், கட்சி பிரதிநிதிகள், போலீசிடம் பேசினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement