Advertisement

'மோடியின் முகத்தில் விவேகானந்தர்': ரவீந்திரநாத் குமார்

புதுடில்லி: பிரதமர் மோடியின் முகத்தில் விவேகானந்தரை காண்கிறேன் என அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.

பார்லி., கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் குமார் பேசியதாவது: சுவாமி விவேகானந்தர், 'எனக்கு வலிமையான, 100 இளைஞர்களை மட்டும் தாருங்கள். இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன்' என்றார். அந்த விவேகானந்தரைத்தான், நமது பிரதமர் மோடியின் முகத்தில் காண்கிறேன்.

தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தபட்ட மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, நாடு முழுவதும் விரிவாக்க வேண்டும். இதற்கென, தனி மசோதா கொண்டுவர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

ஹிந்தியில் பேச்சு:



அடுத்து, பகவத் கீதையில் இருந்து சில வரிகளை, ஹிந்தியில் பேசினார் ரவீந்திரநாத். அதன் பொருள்: மிகப்பெரிய மனிதரின் செயல் களைத்தான், மக்கள் பின்பற்றுவார்கள். அவரின் தன்னிகரற்ற செயல்கள் மூலம் எத்தகைய இலக்கை நிர்ணயிக்கிறாரோ, அது, இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (69)

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    கா கா கா பாட்டு நன்னாவே தெரியும் போல இருக்கே விவேகானந்தர் யாருன்னு இந்த ஆளுக்கு தெரியுமோ

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

    குமாரு நல்ல பாரு ..

  • Snake Babu - Salem,இந்தியா

    Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா அவர்களே நீங்கள் போடும் எதிர்க்கருத்து ஒவ்வொன்றும் நெத்தி அடி,...…………. எப்படி…………………. இப்படி எதிராளிகளை திணறடிக்க விடுறீங்க. சூப்பருங்க, கலக்குங்க…. நன்றி வாழ்க வளமுடன்

    • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

      நன்றி நண்பரே.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    அடிமைக்கு அடிமை தான் வாரிசாக முடியும். மிகவும் குனிபவர்கள் நம்பத்தகுதியானவர்கள் என்பதே வரலாறு.

    • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

      ஆனால் உங்கள் மத்திய கட்சியிலும், மாநில கட்சியிலும் குடும்ப வாரிசுகள் தானே கோலோச்சி இருக்கிறார்கள். வாரிசு வரலாறை தூக்கி பிடிப்பதில் உங்கள் கட்சிகளை யாரும் மிஞ்ச முடியாதே. அப்போது வாரிசுகள் மட்டுமே நம்பத்தகுதியானவர்கள் என்று நீங்கள் ஒப்பு கொள்கிறீர்களா?

  • Nepolian S -

    கரகாட்டக்காரன் படத்துல கவுண்டமணி சொல்ரமாதிரி...கொஞ்சநஞ்சம் இருந்த மானத்தையும் வாங்கிட்டானுங்க

Advertisement