Advertisement

கன்னியாகுமரியில் 23 மீனவர்கள் மாயம்

நாகர்கோவில், கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற 23 மீனவர்கள் கரை திரும்பாததால் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கன்னியாகுமரி ஒற்றையால்விளையை சேர்ந்த அருள்ராஜன் என்பவருக்கு சொந்தமான படகில் 23 மீனவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு ஆழ்கடலுக்கு சென்றனர். அவர்கள் இரவு 9:00 மணிக்குள் கரை திரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் வரவில்லை. தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதை தொடர்ந்து சின்ன முட்டம் துறைமுகத்தில் இருந்து ஆனந்த் என்பவருக்கு சொந்தமான படகில் எட்டு பேர் தேடி சென்றனர். நேற்று காலை அவர்கள் கரை திரும்பினர்.இதை தொடர்ந்து நேற்று காலை 16 பேர் குழுவினர் மற்றொரு படகில் சென்று தேடி வருகின்றனர் . மாலை 6:00 மணி வரை அவர்களை பற்றிய தகவல் இல்லை. இதனால் அவர்கள் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.கன்னியாகுமரியில் கடலோர காவல் குழுமத்துக்கான மூன்று படகுகளும் பழுதாகி நிற்பதால் அவர்கள் துாத்துக்குடிக்கு தகவல் கொடுத்து தேடும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement